Header Ads



கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு தினமும் 3 ரயில்கள்

(Thina) கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு 15 ஆம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன. அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி எல். ஏ. ஆர். ரத்னாயக்கா தெரிவித்தார்.

தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் யாழ். தேவி பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும்.

அதேபோன்று காலை 6 மணிக்கு மற்றுமொரு யாழ். தேவி கிளிநொச்சியிலிருந்து புறப்படும். இந்த ரயில் பகல் 1 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

தினமும் காலை 6.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி கடுகதி ரயில் காலை 11.50 க்கு கிளிநொச்சியை சென்றடையும். காலை 5.45 க்கு புறப்பட்ட யாழ். தேவியை அனுராதபுரத்தில் இன்டர் சிட்டி ரயில் முந்திச் செல்லும். இதே இன்டர் சிட்டி கடுகதி ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து மீண்டும் புறப்படும். இது இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். இரவு 8.15 க்கு புறப்படும் தபால் ரயில் அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடையும்.

இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்தும் தபால் ரயிலொன்று கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும். இந்த தபால் ரயில் அதிகாலை 4.35 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

கிளிநொச்சி, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் போன்ற பிரதான ரயில் நிலையங்களிலும், மொபிடெல் தொலைபேசி ஊடாகவும் ஆசன முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.