Header Ads



சிரியாவின் இரு நகரங்களில் குண்டு வெடித்து 39 பேர் பலி

சிரியாவின் துருக்கி எல்லையோரம் உள்ள நகரில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிகள் தனது முக்கிய எதிரிகளின் இலக்கை தாக்கி அழித்து முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ஜமால்கா நகரின் அரசு அலுவலக கட்டிடம் அருகே கார் குண்டு நேற்று வெடித்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பு அமைப்புகள் கூறின.

மேலும் ஹோம்ஸ் மாகாணத்தின் ஒரு கிராமச் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த கிராமத்தில் அதிபரின் ஷியா பிரிவை சேர்ந்த அலாவைத் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தலைநகர் டமாஸ்கசின் கிழக்குப்பகுதியில் அதிபர் படையுடன் போராளிகள் தீவிர சண்டையில் இறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.