Header Ads



மன நோயாளிகள் மருத்துவமனையில் தீ விபத்து: 37 பேர் பலி

ரஷ்யாவின் மேற்கிலுள்ள நவ்கோராடு பகுதி லூகா கிராமத்தில் மரப்பலகையால் கட்டப்பட்ட ஒரு மனோநோயாளிகள் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. 60 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த இந்த மருத்துவமனையின் ஒரு நோயாளியின் படுக்கையில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 

மளமளவென தீ பரவிய நிலையில் அங்கிருந்த மனநோயாளிகளை காப்பாற்ற ஒரு செவிலியர் முயன்றார். அதற்குள் தீ அவர்களை சுற்றிவளைத்து எரிய ஆரம்பித்தது. இதில் அந்த செவிலியர் உள்பட 37 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 
உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 22 பேரின் உடல்கள் வெளியே எடுத்தனர். மற்ற 23 மனநோயாளிகளை அருகில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக காப்பாற்றினார்.  

பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அந்த மரப்பலகையால் கட்டப்பட்ட மருத்துவமனையை புதிய கட்டிடத்திற்கு மாற்ற அரசு முன்னேர உத்தரவிட்டிருந்தது. இருந்தும் மருத்துவமனை நிர்வாகம் அதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்கோ அருகே ஒரு மனநோயாளிகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.