Header Ads



வடக்கில் 30 ஆசனங்கள் பெற்று, ஆட்சியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

      (ஏ.எல்.ஜுனைதீன்)

இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுள்ள 14 தேர்தல் தொகுதிகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி தம்வசப்படுத்தியுள்ளது.

தமிழரசுக் கட்சியானது வடமாகாண சபைக்கான அத்தனை தொகுதிகளையும் வெற்றி கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் - மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுகொண்டுள்ளது.

வடக்கு மாகாணசபையில், இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட, 38 ஆசனங்களுக்கான தேர்தலில், சுமார் 80 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஆசனங்களில், 14 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதிகளவு ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற வகையில், இரு போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைப்பது உறுதியாகியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில், 213,907 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்களே கிடைத்துள்ளன.

இதன் மூலம், வடக்கு மாகாணசபையில் 30 ஆசனங்களைக் கைப்பற்றி,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கவுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 26 ஆசனங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.. அல்ஹம்துலில்லாஹ்!

    வடக்கு மக்களின் புள்ளடிகள்! அரசுக்கு விழுந்த பொல்லடிகள்!

    அரச தரப்பு அரசியல்வாதிகளின்; அடாவடித்தனங்களுக்கும், படைத்தரப்பின் அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும் வடக்கு மக்கள் எறிந்திருக்கும் கல்லெறிகள்!!

    அரச தரப்புடன் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வடக்குத் தமிழ் - முஸ்லிம் - கிறிஸ்தவ சமூகங்களை அடிமைப்படுத்தி ராஜபோகம் அனுபவிக்க முயற்சித்த டக்ளஸ், றிஸாத் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் செருப்படிகள்!!

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ் பேசும் சமூகங்களின் ஒற்றுமைப்பலம்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. அல்ஹம்தில்லாஹ் வட மாகாண மக்களுக்கு மிக்க நன்றி இனியாவது நாம் தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக இருப்போம் வாழ்க தமிழ் மேலும் மேலும் வளர்க தமிழ்

    ReplyDelete
  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது பிரபாகரனின் பாசிசக் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று ஏன் சொல்லாமல் விட்டீர்கள், மிஸ்டர் புவி...? உங்கள் ஊரான காத்தான்குடிப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற பிரபாகரனை உச்சந் தலையில் வைத்துப் போற்றும் ஓர் இனவெறிக் கும்பலை, மிகச் சிறந்த ஓர் ஊடகவியலாளரான தாங்கள் ஆதரித்து எழுதுவது வியப்பாக இருக்கிறது. இனி அவர்கள் 'வட மாகாணம்' என்று சொல்ல மாட்டார்கள்.பாருங்கள்..'தனி ஈழத் தமிழ் மாகாணம்' என்று சொல்லப் போகிறார்கள்.

    இனி, அங்கு மீள் குடியேறியிருக்கும் அஸ்மின் மௌலவி தவிர்ந்த ஏனைய முஸ்லிம்கள் உடுத்த உடையுடன்-ஒருவேளை அதுவும் இல்லாமல் வெளியேற வேண்டியதுதான்,

    ReplyDelete
  4. Hi Mr. Puvi,
    It is not a miracle and expected that TNA or ITAK will get 2/3 majority in Nothern province.
    If Tamil parties contested individually in this election you would have undestood the real face of Jaffna tamil like Bramin/Kollan/koyawan/vannan/poosari....... . If so UPFA or UNP may leads in Jaffna.
    So don't try to play with your dirty comments as usual.

    kirishnamoorthi.

    ReplyDelete
  5. பெரும் உழைப்பு, பெரும் வெற்றி & பெரும் சந்தோசம்.

    வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete

Powered by Blogger.