Header Ads



ஈராக் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - 30 பேர் வபாத்

ஈராக்கில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதலின் ஒரு பகுதியாக நேற்று பாக்தாத்தின் வடகிழக்கே உள்ள பகுபா மசூதியில் குண்டு வெடித்தது. அங்கு தொழுகையில் நிறைய பேர் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 30 பேர் உடல் சிதறி இறந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

வெள்ளை மற்றும் பச்சை நிற சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த அழகிய மசூதியில் இரத்தமும் சதையும் சிதறிக்கிடந்தது. இங்கு கடந்த செவ்வாயன்று மூன்று கார் குண்டுகள் வெடித்தன. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சாலையோர குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு என நேற்றைய தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.