Header Ads



கென்யா வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 30 பேர் மரணம், 50 பேர் காயம் (வீடியோ)

கென்யா தலைநகர் நைரோபியில் பணக்காரர்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு வணிக வளாகத்திற்குள் 21-09-2013 அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள், திடீரென கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். கையெறி குண்டுகளையும் வீசினர்.  இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அந்த ஹாப்பிங் மாலை சுற்றி வளைத்தனர். அதேசமயம் துப்பாக்கி ஆசாமிகள் உள்ளேயே பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தீவிரவாத தாக்குதல் என்று கூறிய காவல்துறை, இதற்கு எந்த அமைப்பு பொறுப்பு என்பதை தெரிவிக்கவில்லை.

சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்காக கென்யா தனது படைகளை அனுப்பியது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 2011ம் ஆண்டு சோமாலியாவின் புரட்சிப் படையான அல்-ஷாபாப் நைரோபியில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இன்றைய தாக்குதலையும் அவர்கள்தான் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதல் நடந்த வெஸ்ட்கேட் மால், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது. எனவே, அதன் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அடையாளம் காணப்பட்டிருந்தது.

துப்பாக்கியுடன் வந்த நபர்கள், உள்ளே நுழைந்ததும் ‘முஸ்லிம்கள் எழுந்து வெளியேறுங்கள்’ என்று கூறிவிட்டு மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.