சம்மாந்துறையில் 2வது நாளாகவும் புகுந்த யானைகள் - மக்கள் பீதி (படங்கள்)
(யு.எல்.எம்.றியாஸ்,
முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறையில் இரண்டாவது நாளாகவும் இன்று (08.09.2013) ஞாயிற்றுக்கிழமை யானையின் அட்டகாசத்தால் மக்கள் கடுமையான பீதியுடன் காணப்படுகின்றனர்
நேற்று சனிக்கிழமை அதிகாலை சம்மாந்துறை லேக் வீதி மற்றும் சம்மாந்துறை 1ம்,2ம், பிரிவுகளில் நள்ளிரவு வேளையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடுகள் ,பயிர்கள்,மற்றும் நெல் மூட்டைகள் உள்ளிட்டவைகளை சேதமாக்கியிருந்தது இதனால் பீதியுடன் இருந்த மக்களுக்கு இன்று (08.09.2013) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்துள்ளது இதனால் செய்வதறியாது இப்பிரதேச மக்கள் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர்
இன்று அதிகாலை ஊருக்குள் நுழைந்த காட்டு யானை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் விவசாயப் பிரிவின் சுற்றுமதிலை உடைத்து பயிர்களை சேதமாக்கியுள்ளது அதுமட்டுமல்லாது பாடசாலையை சுற்றியுள்ள வீடுகளின் சுவர்,கேட்,நெல் மூட்டைகள் போன்றவற்றையும் சேதமாக்கியுள்ளதுடன் நேற்று சேதமாக்கிய வீட்டை மீண்டும் இன்று அதிகாலை சேதமாக்கியுள்ளது
இக் காட்டுயானையின் வருகையால் நிம்மதி இழந்து தவிக்கும் இம்மக்கள் நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் மேலும் காட்டு யானைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது குடியிருப்புக்கள் நெரிசலாக காணப்படும் பிரதேசங்களுக்கே யானைகள் வரத்தொடங்கியுள்ளது இதனால் எங்கும் பாதுகாப்பு அற்ற நிலை இன்று சம்மாந்துறையில் தோன்றியுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,மற்றும் பொலிசார் உரிய நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வன விளங்கு திணைக்களம் நான்கு மணியுடன் மூடுகின்ற ஒரு சாதரான காரியாலயமாகவே காணப்படுகின்றது.இவர்களது கல உத்தியோகத்தர்கள் களத்தில் இருப்பதற்கு பதிலாக வீடுகளில் உறங்குவார்கள் அல்லது வேறு எங்காவது ஒரு யானை வராத காட்டுப்பகுதியில் தொலைபேசிகளை ஆப் பண்ணிவிட்டு நன்கு குறட்டை விட்டு தூங்குவார்கள்,ஆனால் மாதம் முடிய காலத்திற்கு சென்றதாக கடதாசிகளை தயார்செய்து பணத்தையும் எடுப்பார்கள்.
ReplyDeleteயானைவேடிகள் வாங்கச்செல்வோரிடம் பணம் மற்றும் சாராயத்தை கையூட்டாக பெறுகின்ற இவர்கள் என் அரச சேவையில் இணைக்கப்பட்டார்கள் என்று மறந்து விட்டு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றார்கள்.
இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி யாரும் கேட்டால் அவர்களிடம் சாக்குப்போக்கு சொல்லி அவர்களுடனான சந்திப்புக்களை போய் வாக்குறுதி கொடுத்து முடித்து விடுவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகான சபை அமைச்சர்கள் இருந்தும் வன ஜீவி அதிகாரிகள் பொடுபோக்காக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். குடுவில் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பல தென்னந்தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.ஆனால் தீகவாபிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கின்றார்கள் ஏனெனில் அங்கு வாழ்வது சிங்கள பெரும்பான்மையினர். பார்த்தீர்களா பேரினவாதிகள் எவ்வாறெல்லாம் நமது பொருளாதாரத்தை சிதைக்கின்றார்கள் என்று.
இதுவரை உயிர்சேதம்,பொருள்சேதம் மட்டுமன்றி மனுளைச்சளையும் ஏற்படுத்தும் யானைகளது தொல்லையை என் இன்னும் முடிவுக்கு கொண்டுவர இவர்கள் யாரும் காத்திரமான முடிவுகளை எடுத்து அவற்றை பின்தொடராமல் இருக்கின்றார்கள்?