எமக்கு மத்தியில் ஏன் இந்த பிளவு..? (பாகம் 2)
(M.H.நூருல் ஹசன்)
"சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும்”
அஸ்ஸலாமு அலைக்கும்!
இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
இஸ்லாமிய சகோதரர்களே!
இதற்கு முன் இதே தொடரில் நம் நாட்டில் மட்டுமல்ல முழு உலகிலும் முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதரர்களுக்கும் இடையில் நல்லுறவு என்பது பெயரளவிலேயே காணப்படுகிறது,ஏன் முஸ்லிம்களை பற்றிய தப்பான அபிப்பிராயம் காணப்படுகிறது? இதற்கான ஒரு காரணம் நம் மத்தியிலுள்ள இயக்கங்கள் என்பதை பார்த்தோம்,அடுத்து "சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளையும்" ஒரு கண்ணோட்டம் செலுத்துவோம்.
சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்பது வருட யுத்தத்தில் பல நாடுகளை சேர்ந்த முஸ்லிம் போராளிகள் ஆப்கான் முஜாஹிதீன்களுக்காக போர் களத்தில் குதித்தனர், அக்காலகட்டத்தில் அமெரிக்காவை விட எல்லா விதத்திலும் சோவியத் யூனியனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்பதை புரிந்து கொண்ட அமெரிக்கா இதனை தடுக்க பல வழிகளில் முயற்சித்தது, இதில் ஒரு அங்கமாக ஆப்கானிய முஜாஹிதீன்களுக்கு உதவ முன்வந்தது ( சோவியத் / ஆப்கான் யுத்தத்தை வரலாற்று ஆசிரியர்கள் பனிபோரின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்) அமெரிக்கா தனது CIA உளவு பிரிவின் உதவியுடன் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு பல வழிகளில் அதாவது ஆயுத / பொருளாதார / யுத்த பயிற்சிகள் / தொழில்நுட்ப உதவிகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவினூடாக தாரளமாக வழங்கியது, ஒரு முறை வெள்ளை மாளிகையில் அப்போதைய அதிபர் ரோனல்ட் ரேகன் முஜாஹிதீன்களை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தார். இதற்கான காரணம் முஸ்லிம்களுடனான நெருக்கமோ, அனுதாபமோ கிடையாது, மற்றுமொரு வகையில் மத சார்பற்ற (முஸ்லிம்களின் அடுத்த எதிரியான) சோவியத் யூனியனை எப்படியாவது நசுக்க வேண்டும் , தனது எதிரியை இல்லாதோழிக்க வேண்டும் என்ற உள்நோக்கம்தான். சவூதி அரசாங்கமும் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு இந்த யுத்தத்தில் பகிரங்கமாக உதவியது.
சோவியத் யூனியனுக்கு இந்த யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றி கைக்கூடவில்லை, பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் யாப்புக்கு அமைவாக தனது படைகளை 1989 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலக்கிக்கொண்டது, ஒரு வகையில் அமெரிக்காவுக்கு வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை போன்ற ஒத்த தோல்வியே ஆப்கானில் சோவியத் யூனியனுக்கும் இந்த போரில் ஏற்பட்டது என்றும் கூறலாம். இதற்கான முழு பொறுப்பையும் அப்போதைய சோவியத் தலைவர் மிக்கையில் கோர்பச்சேவே என பலர் கூறினாலும் ஆப்கான் முஜாஹிதீன்களின் விடா முயற்சியும் அல்லாஹ்வின் உதவியுமே காரணம் என்று கூறினால் தவறாகாது, தனது எதிரியை ஒரு வகையில் வீழ்த்திவிட்டோம் என்று அமெரிக்காவுக்கு ஒரு ஆறுதல், அதன் பிறகு சோவியத் யூனியனில் பல வீழ்ச்சிகள் ஏற்பட்டு 1991ஆம் ஆண்டு பதினைந்து நாடுகளாக பிரிந்தது, அதற்காக அமெரிக்காவுக்கு ஓரளவு சந்தோஷம் என்றாலும் உடனடியாக தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானது.
ஆம் அமெரிக்க CIA இயக்குனர், இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசார்டின் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சில மேற்கு நாடுகளின் தலைவர்களின் அவசரமானதும் , இரகசியமானதுமான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது, இந்த சந்திப்பில் மிகவும் பயங்கரமான பல விடயங்கள் ஆராயப்பட்டதாக முன்னாள் CIA உளவாளி ஒருவர் சில விடயங்களை வெளியே தனக்கு நெருக்கமான சிலரிடம் கசியவிட்டிருந்தார் (அவரின் தற்போதைய நிலைமை புரியாத புதிராகவே உள்ளது) அதாவதுசோவியத் யூனியனின் வீழ்ச்சியைவிட நமக்கு எதிர் உள்ள பெரும் சவால் இஸ்லாமும் முஸ்லிம்களுமே, ஏனென்றால் ஒவ்வொரு துறையிலும் இஸ்லாமும் முஸ்லிம்களும் பெரும் வளர்ச்சி கண்டுவருகிரார்கள், எதிர்காலத்தில் முழு உலகையே ஆட்சி செய்ய நேரிடலாம், இஸ்லாம் மார்க்கம் வளர்வதை எப்படி தடுப்பது , மத்திய கிழக்கில் இஸ்ரேலை எப்படி பாதுகாப்பது, முஸ்லிம்களின் பொருளாதார , கல்வி வளர்ச்சியை எப்படி இல்லாமல் செய்வது போன்ற சூழ்ச்சிகளை நடைமுறைபடுத்தவே இந்த இரகசிய கூட்டம் நடை பெற்றுள்ளது, இதற்க்காக ஒரு குழுவை அமைத்து அதன் தலைவரராக CIAவின் இயக்குனரான William H. Webter என்பவரை தெரிவும் செய்தனர். அந்த முக்கிய சூழ்ச்சிகளில் சில இவைதான்.1
. முஸ்லிம்களுக்கிடையே யூத சியோனிசவாதிகளை முஸ்லிம்களை போன்று வேடமிட்டு ஊடுரவசெய்து இஸ்லாமிய மத கடமைகளிலும், மார்க்க சட்டங்களிலும் முழுமையாக அல்லாமல் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்துவது (சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஒரு மதரஸாவில் உள்ள முஸ்லிம் வேடமிட்ட ஒரு ஆசிரியரை மாணவர்கள் கையும்களவுமாக பிடித்தும் உள்ளார்கள், உண்மையில் இவர் ஒரு யூதர் என்று பிறகு தெரிய வந்துள்ளது) அதேபோல் அதிகமாக போலி இஸ்லாமிய இயக்கங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் தவரான இஸ்லாமிய கொள்கைகளை பரப்புதல்.
2. முஸ்லிம்களை தீவிரவாதிகளை போல் உலகத்துக்கு அறிமுகம் செய்வது, முஸ்லிம் போராளிகளை தாமே உருவாக்கி உதவுவது போல் உதவிவிட்டு அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்துவது, இதற்காக அனைத்து ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து வழி நடாத்துதல் (இதற்க்கு உதாரணம் அன்றைய ஆப்கானிய முஜாஹிதீன்களை இப்பொழுது தீவிரவாதிகள்)
3. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் தமக்கு சார்பான தலைவர்களை ஆதரித்து அவர்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தல், அதன்மூலம் எந்த ஒரு தீர்மானத்திலும் கருத்து ஒற்றுமையை ஏற்படாதவன்னம் தடுப்பது.
4. வளைகுடா நாடுகளில் போர் மூட்டத்தை ஏற்படுத்தி தமது நிலைகளையும், துருப்புகளையும் நிலை நிறுத்தி அவர்களின் வளங்களை சுரண்டி தமது நேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளல்
5. சுன்னி முஸ்லிம்கள்மீது ஷியாக்கள் கொண்டுள்ள உண்மையான பகைமையை (அறிந்து கொண்டு) , அவர்களை பயன்படுத்தி சுன்னி முஸ்லிம்களை ஒடுக்குவது (ஏனென்றால் ஷியாக்களுக்கும் யூதர்களுக்கும் பாரிய வித்தியாசம் இல்லை "யார் இந்த ஷியாக்கள்" என்ற எனது இதே அடுத்த தொடரில் இதனை பற்றி இன்ஷா அல்லாஹ் விளக்குவேன்) இதற்க்கு ஈராக் யுத்ததை ஒரு உதாரணமாகவும் தற்போது பஹ்ரைன்,குவைத், சவூதி அரேபியா, ஈராக் நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு ஷியா / சுன்னி பிராச்சினைகளை குறிப்பிடலாம்.
6. இந்த சூழ்ச்சி மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை என கருதலாம் அதாவது யூத கிருஸ்துவ அழகிய பெண்களை பல வழிகளில் அரபு நாடுகளுக்கு அனுப்பி பெயர் தாங்கி முஸ்லிம்களுடன் உள / உடல் நெருக்கங்களை ஏற்படுத்தி அவர்களை வழி நடத்த்தல் (இதனை இன்று அரபு நாடுகளில் மிகவும் சாதரணமாகவே காணலாம்) இதற்கான காரணம் அரபு நாடுகளில் உள்ள அராபியர்களை பணத்தின் மூலம் தமது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவது கொஞ்சம் கடினமான செயல், அதனால்தான் இந்த வழி முறை, இதற்காக பாலியல் பயிற்சிகளையும் அந்த பெண்களுக்கு அவர்கள் வழங்குகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டும் , இதன் மூலம் பெயர் தாங்கி முஸ்லிம் ஆண்களை தமது ஆதிக்கத்தில் வைக்க அவர்களால் முடிகிறது (இதே வழிமுறையை CIA உளவுபிரிவு உகண்டாவின் முன்னால் ஜனாதிபதியான “ஈதி அமீனுக்கும்” இப்படியான பெண்களை பயன்பத்தி கொலை செய்யவும் திட்டமிட்டார்கள்) அதேநேரம்முஸ்லிம் ஆண் பெண் அனைவருக்குமிடையில் மேற்கத்திய கலாச்சார மோகத்தை உருவாக்குதல்.
7. அல்குர்ஆனை போன்று போலியான ஒரு புத்ததகத்தை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துதல் அதற்கமைய 20 ஜஸுக்களை கொண்ட போலியான ஒரு நூலை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டு தோல்வியும் கண்டார்கள் (அல்லாஹுதஆலா தனது அருள் மறையில் அழகாக கூறுகிறான்: “நாமே அதனை இறக்கிவைத்தோம் , நாமே அதனை பாதுகாப்போம்”)
மேலும் பல முக்கிய சூழ்சிகளை இங்கே இந்த மோசக்கரர்கள் மேற்கொண்டிருக்கிரார்கள், இதில் முக்கியமாக முஸ்லிம்களை எந்த விதத்திலும் ஒற்றுமையாக இருக்க இடமளிக்க போவதில்லை என்ற குறிக்கோளே உறுதியான தீர்மானமாக அமைந்துள்ளது, இதற்கான முழு உதவிகளையும் எப்பொழுதும் அமெரிக்க/இஸ்ரேலிய யூத செல்வந்தர்கள் வழங்க தயாராக இருக்கிறார்கள், இவர்கள்தான் இன்றும் அமெரிக்க அரசியலையும் , பொருளாரத்தையும் தமது கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளர்கள்,இந்த சூழ்ச்சி நடவடிக்கை ஒரு நீண்ட கால (வரையறுக்கப்படாத) ஒரு திட்டமாகவே இங்கு எமக்கு தோன்றுகிறது, ஏன் என்றால் இந்த நடவடிக்கைகள் இப்பொழுதும் தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுகின்றதை நம்மால் அவதானிக்க முடிகின்றது, இந்த உண்மையை புரிந்தும் நமது முஸ்லிம் தலைவர்கள் புலி வாலை கதை போல தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே வேதனையான விடயம். முஸ்லிகள் தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அல்லாஹ்வினதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் வாழ்கையை ஏற்று நடக்க மறந்துதான் அல்லாஹ்வின் சோதனைதான் இன்று முஸ்லிம்களிடயே இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுவதற்க்கு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது, இதோ அல்குர்ஆன் மிகவும் கண்டிப்புடன் கூறுகிறது "5:105. ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்"
حَسْبُـنا اللهُ وَنِعْـمَ الوَكـيل
இன்ஷா அல்லாஹ் "யார் இந்த ஷியாக்கள்" என்ற விளக்கத்தை இதே தொடரில் விளக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக)
Post a Comment