Header Ads



2 ஆண்டாக கோமா நிலையில் இருந்து திருமணமானதும் உயிரை விட்ட சீன பெண்


சீனாவில் உள்ள குவாங்டன் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹீஜிங்ஜிங் (வயது 28). இவரும், அதே பகுதியை சேர்ந்த லூலாய் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.

அவர்களுக்கு 2011–ம் ஆண்டு திருமணம் நிச்சயம் நடந்தது. இதையடுத்து திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக இருவரும் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக ஹீஜிங்ஜிங் அலுவலகத்தில் அதிக நேரம் உழைத்து வந்தார். இதில் சோர்வு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன்பிறகு எழுந்திருக்கவே இல்லை. நீண்ட கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

உயிர்காக்கும் உதவி கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தன. அவரது உடல்நிலை மோசமாகி வந்தது. அவர் இனி பிழைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறினார்.

இந்த நிலையில் லூலாய் தனது காதலியை திட்டமிட்டபடி திருமணம் செய்ய முடிவு செய்தார். ஹீஜிங்ஜிங்குக்கு 28–வது பிறந்தநாள் வந்தது. எனவே அந்த நாளில் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அன்று அவருக்கு பிறந்த நாள் கேக் வெட்டியதுடன் லூலாய் காதலியை திருமணம் செய்தார். சிறிது நேரத்தில் அவரது உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. இதனால் ஹீஜிங்ஜிங் உயிரிழந்தார்.

திருமணமும், அதைத் தொடர்ந்து மரணமும் நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுபற்றி லூலாய் கூறும்போது, எனது மனைவி எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறார். அவர் சாகவில்லை என்று கூறினார்.

No comments

Powered by Blogger.