Header Ads



பிரிட்டனில் மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்ததாக பெண்

பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான் என்ற இறந்திருந்த அந்த பையனின் உடலில் அப்போது குழந்தையின் ஆடை உடுத்தப்பட்டிருந்தது.

இந்த கொடூர கண்டுபிடிப்பு குறித்து பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் அவனது தாயார் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த விசாரணையில், கடந்த 2009-ம் ஆண்டு நான்கரை வயது இருந்தபோது அவன் பட்டினியால் இறந்து இருக்கிறான். அவனது உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்தும் இருந்து இருக்கிறார். மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான அமந்தாவின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் அந்த குழு உறுதி செய்தது.

ஆனால், தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது. ஆனால் அமந்தா அந்த குழந்தையை பட்டினி போட்டு, மருத்துவ உதவியும் செய்யாமல் கொன்றார் என்று தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

அமந்தாவின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருகிறார்.

No comments

Powered by Blogger.