செப்டெம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினம்
சுற்றுலா செல்வது என்றாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். சுற்றுலா என்பது லட்சக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம். சென்ற ஆண்டு நூறு கோடி பேர் உலகம் முழுவதும் சுற்றுலா செல்கின்றனர்.
சுற்றுலா மூலம் தான், பல்வேறு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகை ஒருங்கிணைக்கவும் முடிகிறது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.
சுற்றுலா பலவிதம்:
கல்வி சுற்றுலா, இன்ப சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், பீச் என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.
இந்தியா எங்கே:
2012ம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகை ஈர்க்கும் நாடு எது
நாடு எத்தனை பேர்
பிரான்ஸ் 8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா 6 கோடியே 70 லட்சம்
சீனா 5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின் 5 கோடியே 77 லட்சம்
இத்தாலி 4 கோடியே 64 லட்சம்
துருக்கி 3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி 3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து 2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா 2 கோடியே 57 லட்சம்
மலேசியா 2 கோடியே 50 லட்சம்
Post a Comment