Header Ads



ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து, 27 தொழிலாளர்கள் மரணம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் பழமையானதாகவும், பாதுகாப்பற்றவையாகவும் உள்ளன. அங்கு வேலை செய்யும் பணியாளர்களும் பாதுகாப்பு சாதனங்களோ,போதிய காற்றோட்டமோ இல்லாத நிலையில் பழைய உபகரணங்களுடனே அங்கு வேலையும் செய்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள சமங்கன் மாகாணத்தின் உட்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதி நேற்று சரிந்து விழுந்தது. அதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 27 தொழிலாளிகள் இறந்துவிட்டதாகவும், இன்னும் 12 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக் குழுவினர் அங்கு முகாமிட்டு இறந்தவர்களின் உடல்களை வெளியில் கொண்டுவரவும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவத்தை உறுதி செய்த மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான முகமது செடிக் அஸிசி, இது குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 20 பேர் காயமுற்றதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். சமங்கன் மாகாணத்தின் பாதுகாப்புத் துணை அதிகாரி மொசடிகுல்லா முசாபரி மீட்புப் பணியாளர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் இன்னும் 12 பேர் சுரங்கத்தின் உள்ளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.