கல்முனை மாநகர சபைக்குரிய முத்திரை வரி ஒரு கோடி 25 இலட்சம் ரூபா விடுவிப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர சபைக்குரிய 2010, 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான முத்திரை வரி ஒரு கோடி 25 இலட்சம் ரூபா கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அயராத முயற்சியின் விளைவாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த ஆண்டுகளுக்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப்பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பில் அண்மையில் கிழக்குமாகாண ஆளுநர் றியர்அட்மிரல் மொகான் விஜேவிக்ரம, கிழக்குமாகாண முதலமைச்சு மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்குமாகாண பிரதிப்பிரதம செயலாளர் – நிதி எஸ்.குமரகுரு ஆகியோரை சந்தித்து முத்திரை வரியினை குறித்த காலத்திற்குள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாய் மேற்படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் வருமானத்தில் முத்திரை வரி வருமானம் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. மாநகர சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளை சீராகா மேற்கொள்வதற்கு மேற்படி நிதி பங்களிப்புச் செய்யவல்லது.
Post a Comment