Header Ads



23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

‘23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென்  ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது.   தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல்  எடை மிக  அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது.

கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. ‘நீங்கள் உடல் எடையை குறைக்காவிட் டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது’ என்று அதிகாரிகள்  எச்சரித்து இருந்தனர். உடல் எடையை குறைக்க அவர்களே அவருக்கு உதவிகளையும் செய்தனர். உடல் எடை அதிகமான ‘குண்டு’ மனிதர் களுக்கு அரசு உதவி அளிக்கப்படும். தனியார் அமைப்புகள் மூலமும் நிதி, மருத்துவ உதவி பெற்று தரப்படும். இந்த உதவியை நியூசிலாந்து மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டவர் சிலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

  அந்த வகையில் ஆல்பர்ட்டுக்கு குடியேற்ற துறை பரிந்துரைத்து, நியூலாந்து சுகாதார துறை உதவிகளை அளித்து வந்தது. ஆனாலும், சாப்பாட்டு  பிரியரான ஆல்பர்ட்டால் நாக்கை அடக்க முடியவில்லை. கடந்த மூன்று மாதம் முன் அவர் மீண்டும் விசா புதுப்பிக்க சென்ற போது, அவர் உடல் எடை 130 கிலோவாக இருந்தது.

கடந்தாண்டை விட, பத்து கிலோ அதிகரித்த நிலையில், அவர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. குடியேற்ற துறை, அவருக்கு விசா புதுப்பிப்பதை மறுத்து, சுகாதார அமைச்சகத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வர உத்தரவிட்டது.

சுகாதார அமைச்சகம் அவர் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டது. ‘அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விடலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் வேலை நிமித்த விசா புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மனைவி மார்த்தி, நியூசி அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதினார். ‘இன்னும் சில மாதங்கள் அவகாசம் தாருங்கள்; கண்டிப்பாக என் கணவர் உடல் எடையை குறைத்து விடுவார்’   என்று உறுதி கூறியிருந்தார்.

  இதையடுத்து, ஆல்பர்ட்டுக்கு 23 மாதம் அவகாசம் அளித்துள்ளது நியூசிலாந்து சுகாதார அமைச்சகம். ‘23 மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்து காட்ட வேண்டும். அவர் உத்தரவாதத்தால் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சுகாதார துறை உதவிகள் இந்த 23 மாதங்கள் கிடைக்காது. அவர் தான் செலவை ஏற்க வேண்டும்’

என்று கூறினார் சுகாதார அமைச்சர் நிக்கி கேயி. எப்படியோ 23 மாதம் வரை அவகாசம் கிடைத்ததே  என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆல்பர்ட், உடல் எடையை குறைக்க தினமும் உணவு கட்டுப்பாடு, பட்டினி,  உடல் பயிற்சி என்று பகீரதப்பிரயத்னம் செய்து வருகிறார்.  குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.