Header Ads



22 கேரட் தங்க டீ - துபாயில் ஒரு கப் 55 திர்ஹாம்

இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன ‘டீ’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாயில் முதன் முறையாக இந்த ‘தங்க டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள ’‘மொக்கா ஆர்ட் கபே’ ஓட்டலில் இந்த ‘டீ’ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் விலை ஒரு கப் இந்திய ரூ.925 (55 திர்ஹாம்) மட்டும். ‘மொக்கா ஆர்ட் கபே’யின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். ‘தங்க டீ’ குறித்து அவர் கூறியதாவது,

இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த ‘டீ’யை துபாயில் அறிமுகம் செய்தேன்.

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட் தங்க பிளேட்டுகளாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் மொராக்கோ அனுப்பப்பட்டு டீயின் சுவை அளிக்கப்படுகிறது.

இந்த டீ அரபு நாட்டினர், மேற்கத்தியர்கள் என அனைத்து தரப்பினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது உடல் நலத்துக்கும் நல்லது’’ என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.