Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் 2014ஆம் ஆண்டு உருவாகும் - ரணில்

2014 ஆம் ஆண்டு தாம் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் 67வது அகவையை ஒட்டியதாக நிகழ்வுகள், கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் 06-09-2013 இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது எமது கட்சிக்கு 67 வயதாகின்றது. கட்சியில் சிறந்த இளைஞர்கள் செயல்படுவதால், கட்சியினை முன்னெடுப்பார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. 2014ஆம் ஆண்டு அரசாங்கத்தை மாற்றும் தேர்தலாக எடுத்துக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் அப்போது முதல் உருவாகும். இனி பின்னோக்கி செல்ல முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும். நாம் வெற்றியடைய வேண்டும். புதிய இலங்கையை உருவாக்கித் தருவேன் என்று உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.

நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர  மாற்று வழியில்லை. நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு மாற்று வழியில்லை. ஐக்கிய தேசிய கட்சியுடனேயே செல்ல வேண்டும். புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும். நாம் முன்னேற வேண்டும். நன்றாக வாழக் கூடிய பொருளாதாரத்தை தரக் கூடிய தொழில் வேண்டும். கட்டம் கட்டமாக தேர்தல்களை வைத்து, தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அரசாங்கம் முனைகின்றது. அது எல்லாக் காலங்களிலும் பொருந்தாது.

2 comments:

  1. கனவு காணும் வாழ்கையாகும் கலைந்துபோகும் கோலங்கள், எல்லா துடுப்புகளையும் விட்டுவிட்டு நடுக்கடலில் நின்றுகொண்டிருக்கிறார் . பாவம் மனுஷன் மண்டைய போடுறதுக்கு முன்னாடி நிறைவேறினால் நல்லதுதான். எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது

    ReplyDelete
  2. IT IS NOT POSSIBLE.... AS LONG AS YOU ARE LEADER OF UNP.

    ReplyDelete

Powered by Blogger.