Header Ads



மனைவியின் தோள் மீது தட்டிய கணவருக்கு 20 சவுக்கடி

தன் தோள் மீது கணவர் தாக்கியதாக பெண்ணொருவரின் முறையீட்டை விசாரித்த சவூதி, கதீஃப் நகர நீதிமன்றம் அந்தக் கணவருக்கு 20 சவுக்கடி கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

அப்பெண், கணவர் மீதான தனது முறையீட்டை ஒருமாதத்துக்கு முன்பு செய்திருந்ததும், அதன் பொருட்டு மருத்துவச் சான்றிதழ் ஒன்றை அவர் ஆவணப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கணவர், தான் இயல்பாகவே மனைவியின் தோளில் தட்டியதாகக் குறிப்பிட்டார். பின்னர் அப்பெண் தங்களுக்குள் சமாதானமாகி விட்டதாகக் கூறி, தன் புகாரை திரும்பப் பெறுவதாகக் கூறிய போதிலும், நீதிமன்றம் தான் விதித்த தண்டனையை விலக்க மறுத்துவிட்டது.

மேலும், தண்டனை நிறைவேற்றப்படும் போது மனைவி வந்து பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது. Inne

No comments

Powered by Blogger.