Header Ads



19 வயதான பௌத்த பிக்குவுடன், 17 வயதான பாடசாலை மாணவி கைது

அனுராதபுரம் ஸ்ரவஸ்திரபுர பகுதியில் உள்ள விடுதியொன்றை சுற்றிவளைத்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் அதிகாரிகள், பௌத்த பிக்கு ஒருவரையும் இளம் பாடசாலை மாணவியையும் கைது செய்துள்ளனர்.
 
19 வயதான பௌத்த பிக்கும் 17 வயதான பாடசாலை மாணவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிக்குவும் பாடசாலை மாணவியும் சுமார் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிக்கு கெக்கிராவை மரதன்கடவல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் என பொலிஸார் கூறினர்.

அதேவேவளை பிக்குவுக்கும் மாணவிக்கும் தங்குமிடத்தை வழங்கிய விடுதியின் உரிமையாளரை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. அடப்பாவிகளா...!
    இந்த லட்சணத்தில்தானா நீங்கள் ஒரு இலட்சம் தர்ம பாலர்களை உருவாக்கி ... இரண்டாயிரம் பொதுக்கூட்டங்களை நடாத்தி... பத்து இலட்சம் பிரசுரங்களை வெளியிட்டு இந்த நாட்டில் புனித பௌத்தத்தை நிலை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள்..?!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Every male needs a woman. This is the way God created us. If a religion prohibits its Monks not to get married, what can they do? This is the reality. The blame is on the the religious practice and it shows hear how impossible life these people are persuing. Bodu Bala sena- what is the solution??

    ReplyDelete

Powered by Blogger.