வாக்களிக்கத் தவறியோருக்கு 18 ஆம் திகதி இறுதி சந்தர்ப்பம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகண சபைகளுக்கான தேர்தலில் அஞல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் வாக்களிக்கத் தவறியோருக்கு 18 ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
நாளை 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் மற்றும் தேர்தல்கள் செயலகம் என்பனவற்றில் அஞ்சல் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இத்தினம் எந்தவொரு விதத்திலும் மேலும் கால நீடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த 9 ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. பின் 12 ஆம் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
Post a Comment