Header Ads



17 ஆவது குழந்தையின் வரவுக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் தாய்

ஒன்றுக்குப் பின்னர் இரண்டாவது குழந்தையைப் பற்றி யோசித்தாலே பொருளாதார சிக்கல்கள்தான் கண்முன் தோன்றிப் பயமுறுத்தும். இத்தகைய கால கட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருமணமாகிய 23 ஆண்டுகளில் தனது 17ஆவது குழந்தையின் வரவை சந்தோஷமாக வெளியில் அறிவிக்கும் இவர் ஒரு சூப்பர் தாயாகத்தான் இருக்கமுடியும்.

லங்காஷயரின் மோர்கம்பே என்ற இடத்தில் வசித்துவரும் நோயல்(41),மற்றும் அவரது மனைவி ஸ்யு ரட்போர்ட்(38)என்ற இருவரும் பேக்கரி ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணமான இந்த 23 வருடங்களில் ஒவ்வொரு 17 மாத இடைவெளியிலும் அவர்கள் வீட்டில் ஒரு புதுவரவு தோன்றும். இவர்களது 16ஆவது மகன் காஸ்பர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் பிறந்தான். தற்போது 11 மாத இடைவெளியில் தான் மீண்டும் தாயாகப் போவதை ஸ்யு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கள் குடும்பத்துடன் இணையப் போகும் புதுவரவு குறித்து கணவன், மனைவி இருவருமே சந்தோஷிக்கின்றனர்.

ஒன்பது அறைகள் கொண்ட வீட்டில் வசித்துவரும் இவர்கள் தங்களின் போக்குவரத்திற்காக சிறிய பேருந்து ஒன்றினையே வைத்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டில் இவர்களது குடும்பம் பற்றி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரியான '15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்' இவர்களை வெளியுலகில் பிரபலப்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.