Header Ads



சவுதி அரேபியா வீட்டில் சிறைவைக்கப்பட்ட இலங்கை பெண் 16 வருடங்களின் பின் மீட்பு

சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 16 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த பெண் ஒருவரே மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தற்போது சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனிய கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட பணிப் பெண் நுவரெலியாவிலுள்ள அவரது உறவினர்களுடன் ஸ்கைப் ஊடாக உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Nf

1 comment:

  1. pls edhay pondu ennum nam ariyada ettinayo pengal avadey pattukkondu irukkurarhal awarhalayum metkavendum

    ReplyDelete

Powered by Blogger.