Header Ads



நடுவானில் பைலட் மரணம் - 161 பயணிகளுடன் சாமர்த்தியமாக விமானம் தரையிறக்கியது

நடுவானில் பறந்த போது விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பைலட் இறந்தார். மற்றொரு பைலட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் உயிர் தப்பினர். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் இருந்து வாஷிங்டன் ஷீட்டல் கடற்கரை நகருக்கு போயிங் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது பைலட்டுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து விமானத்தை ஓட்டி செல்ல முடியவில்லை. விவரம் அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடன் இருந்த மற்றொரு பைலட் விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி, போயிஸ் டார்மாக் ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கினர். 

அங்கு மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பைலட்டை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். எனினும் செயின்ட் அல்போன்ஸ் மண்டல மருத்துவ மையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாரடைப்பால் இறந்த பைலட் டெக்சாசை சேர்ந்த ஹென்றி ஸ்லம் (63) என்பது தெரிய வந்தது. அமெரிக்க விமானத்தில் 26 ஆண்டுகள் பைலட்டாக பணியாற்றி உள்ளார். விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.