அல் ஷாபாபுக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை - 160 இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா
(Tn) சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க போராடும் அல் ஷபாப் ஆயுதக் குழுவுக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை என்று அந்நாட்டின் சுமார் 160 இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளனர்.
சேமாலியாவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல் ஷாபாபுக்கு எதிராக இஸ்லாமிய தலைவர்கள் இவ்வாறான பத்வாவை வழங்குவது இதுவே முதல் முறையாகும். மொகடிஷ¤வில் இடம்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் மாநாட்டில் அல் ஷபாப்பின் வன்முறை செயல்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவில் ஓர் ஆண்டுக்கு முன் சோமாலிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஹஸன் ஷெய்க் மஹ்மூத் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.
Post a Comment