15-வது பிறந்தநாள் கொண்டாடும் கூகுள் - சொக்லேட்டாக கொட்டுகிறது
கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கூகுள் தனது 15வது பிறந்தநாளை டூடுள்(doodle) உடன் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் பயனர்களை (users) தனது பழைய 1998-ம் ஆண்டின் கூகுள் ஹோம்பேஜ்க்கு (homepage) கொண்டு செல்கின்றது. இன்று நீங்கள் கூகுள் லோகோ உடன் பிறந்தளை விளையாடக்கூடிய வகையில் இன்டராக்டிவ் டூடுள் கொண்டதாக கூகுளின் லோகோ காணப்படுகின்றது.
இன்றைய டூடுளில்(Google) ஜி ஓ ஓ ஜி எல் இ எழுத்துக்கள் நகரும் தன்மை கொண்டதாக உள்ளன. கூகுளில் உள்ள இரண்டாவது ஓ கேக் வடிவத்தில் உள்ளது. கேக்கின் மேல் 15 என்ற வடிவத்தில் மெழுகுவர்த்தி உள்ளது. இரண்டாவது ஜி கண்ணை கட்டியபடி ஒரு கம்புடன் பாற்றையற்றவர் தோற்றத்தடன் நிற்கும், ஸ்பேஸ்பாரை(spacebar) தட்டினால் ஜி எழுத்தின் கையில் உள்ள கம்பு நட்சத்திர பையை அடிக்கும். உடனே அந்த பையில் இருந்து சாக்லேட்டாக கொட்டும்.
கூகுள் புதிய 'HummingBird' search அல்காரிதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று தேடுதல் மூத்த துணை தலைவரான அமித் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Post a Comment