Header Ads



அடையாள அட்டை பெறுவதற்கான வயதெல்லை 15 ஆக குறைப்பு

புதிய தொழில்நுட்பங்களுடனான அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டார். தொழில்நுட்பங்களுடனான புதிய அடையாள அட்டையில் கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குடும்ப அலகுகளை கருத்திற்கொண்டு, தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. புதிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்டத்திற்கு அமைய, அடையாள அட்டைக்கான வயதெல்லை 15 ஆக குறைக்கப்படவுள்ளது. தகவல்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னர், தகவல் சேமிப்பகம் உருவாக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்துள்ளார். nf

No comments

Powered by Blogger.