பொலிஸ் திணைக்களத்தின் 147வது தினம் - தெவட்டகஹ பள்ளிவாசலில் சமய நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 147வது தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை(03) கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்
கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் குழு மதவிவகார தலைவரும் ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகார இணைப்பாளருமான கலாநிதி மௌலவி ஹசன் மௌலானா விசேட துஆ பிரார்த்தனை நடத்தினார்.
இங்கு பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண உரையாற்றுகையில்: பொலிஸாரின் அர்ப்பணிப்புடனான சேவையை பாராட்டி பேசியதுடன் இனங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதில் பொலிஸார் தீவிர அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் பெறுவதற்கு பொலிஸார் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன, மத, கட்சி பேதமின்றி செயலாற்றுவதன் மூலம் பொலிஸாரின்மீது மக்கள் நம்பிக்கை கொள்ளமுடியும் என்றார். பொதுமக்கள்- பொலிஸ் உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இருசாராரும் இணைந்து செயற்படுவது இனங்களுக்கிடையலான பிரச்சினைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே தடுக்க முடியும் என்றார். இதற்காக இருசாராரும் அடிக்கடி கலந்துரையாடல்களை மேற்கொள்வத மிகவும் அவசிமெனவும் குறிப்பிட்டார்.
இன, மத, கட்சி பேதமின்றி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எந்தத்தரப்புக்கும் ஒருபோதும் அநீதி இழைக்க இடமில்லையென தெரிவித்தார். இந்த நிகழ்வில் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர் (பயிற்சி) எம்.ஆர்.லதீப், சிரேஷ்ட பொலிஸ அத்தியட்சகர் ரீ.பி.சம்சுத்தீன் உட்பட பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பலமட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Where is that lighting the traditional oil lamp?
ReplyDeleteயா அல்லாஹ்...என்று அழியுமோ இந்த அறியாமை?
ReplyDeleteஎன்று மாறுமோ இந்த மடமை?
யா அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நல்ல ஈமானைக் கொடுப்பாயாக, ஷிர்க்கை விட்டும் காப்பாற்றுவாயாக
ReplyDelete