14 ஆண்டுகளுக்கு முன் மரணித்தவருக்கு, மாகாண தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு (வீடியோ)
14 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவருக்கு, இம்முறை மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை தொடர்பான தகவல் மஹவ பகுதியில் பதிவாகியுள்ளது.
மஹவ - தலதாகம பகுதியில் வசித்த டி.எம்.சிட்டம்மா, 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். எனினும், வடமேல் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உயிரிழந்த டி.எம்.சிட்டம்மா, தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அவரது இல்லத்திற்கு கிடைத்துள்ளது.
அதுமாத்திரமன்றி, 16 வருடங்களுக்கு முன்னர் அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருந்த சிட்டம்மாவின் மகளுக்கும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரமே, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தது.
இந்த சம்பவம் குறித்து குருநாகல் தேர்தல் செயலகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் தேர்தல்கள் செயலகம் கூறியது.
Post a Comment