அமெரிக்க கடற்படை தளம் தாக்குதல் - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள கடற்படை தளத்திற்குள் ராணுவ உடையில் வந்த மூன்று பேர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மிகவும் பாதுகாப்பான பகுதியான இங்கு தைரியமாக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் இருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள், போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ராணுவ உடையில் தாக்குதல்:இந்த தாக்குதல் நடத்தியவர்களில் 50 வயதான ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ராணுவ உடையில் வந்த மற்ற இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் ஒருவர் 50 வயது மதிக்கத்தக்கவன் என்று கூறப்படுகிறது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கும் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதையடுத்து தலைநகரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ உடையில் வந்த அவர்கள் உண்மையான ராணுவ வீரர்கள் அல்ல. அவர்கள் எதற்காக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவில்லை என அந்நகர போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் தலைமை அதிகாரி கேத்தி கூறியதாவது,
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்றும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவ தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்புள்ளதாகவும், துப்பாக்கியுடன் வந்த ஒருவன் பலியானதாகவும் மற்ற இருவரையும் தேடி வருவதாகவும் இதில் கடற்படையும் இணைந்து கண்டுபிடிக்க உதவும் என அவர் தெரிவித்தார்.
ஒபாமா வேண்டுகோள்:கோழைத்தனமான இத் தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
ஆரன் அலக்சிஸ் (34)பௌத்தரான இவன் அமெரிக்க படைப்பிரிவில் கடமையாற்றியவர் என்று தகவலகள் தெரிவிக்கின்றன. பௌத்த பயங்கரவாதம் அமெரிக்காவிலும் உள்ளது. கோட்டாபே ராஜபக்ச என்ன சொல்லப்போகிறார் இதை
ReplyDelete