Header Ads



அட்டாளைச்சேனையில் மர்ஹும் அஷ்ரபின் 13வது ஞாபகர்த்த தினம் (படங்கள்)


(ஏ.எல்.ஜனூவர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 13வது ஞாபகர்த்த தினத்தை முன்னிட்டு தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஞாபகர்த்த தினமும் கத்தமுல் குர்ஆனும் துஆ பிரார்த்தனை வைபவமும் அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸின் மத்திய குழுவின் உப தலைவர் ஏ.பி.ஏ. கபூர் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைறாத் பள்ளி வாயலில் இடம்பெற்றது. 

இதன் போது மறைந்த தலைவர் அவர்களின் நினைவாக நினைவுப் பேருரையும், துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், அரச, திணைக்கள தலைவர்கள், கல்விமான்கள் உட்பட உயரதிகாரிகளும், பொதுமக்களும், தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.



5 comments:

  1. மரணித்த ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் செய்யும் பிரார்தனைகள் உங்களின் தகுதியைப்பொருத்து சில வேளை ஏர்றுக்கொள்ளப்படலாம்.ஆனால், இப்படியான பொய் பித்தலாட்டங்களால் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அதற்கெல்லாம் மார்கத்தில் அனுமதியுமில்லை ஆதாரமுமில்லை,மார்கத்தில் மனிதர்கள் எவ்வளவோ முன்னேறிய இக்காலத்தில் இன்னுமும் பலங்காலத்து நம்பிக்கைகளையும் முறைகளையும் பின்பற்றி வாழுவது வடிகட்டிய முட்டால்தனம். பெருமைக்கு இடிக்கும் உங்கள் வேளையை இறைவனே பார்கிறான்,இதனால் எவருக்கும் நன்மையில்லை தவிர, அனுமதியில்லாத ஒன்றை செய்ததால் இறைவன்பால் பாவமே உங்கள் அனைவருக்கும் எழுதப்படும்.தயவுசெய்து ஜஃப்னா முஸ்லிம் அரசியல் பாரபட்சம் பார்காமல் இந்த காமெண்டை பிரசுரிக்கும்படி கேட்கிறேன்.

    ReplyDelete
  2. Dear Shajahan, மறைந்த மாமனிதர் பேரில் பிரார்த்தனை செய்வதை எதிர்க்க உங்களுக்கு அருகதை இல்லை. உங்கள் போன்றவர்கள் எல்லாரும் சினிமா பார்ப்பீர்கள் ரசிப்பீர்கள். அதுக்கெல்லாம் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? அதை எல்லாம் தடுக்க மாட்டீர்கள். வடிகட்டிய முட்டாள்தனம் உங்களிடம் தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. Dear Rilwan Ghazali, மறைந்தவர் மாமனிதரோ, சிறுமனிதரோ, அது அல்ல இங்கு பிரச்சினை, உங்களின் பிரச்சினையை திசை திருப்ப(நாட்டின் பிரச்சினையை திசை திருப்ப க்ரீஸ் மனிதன் வந்தது போல்)சம்பந்தமில்லாமல் சினிமாவை கிளப்புகிறீர்கள். சினிமாக்கூட உங்களைப்பொலவர்களுக்குதான் சொந்தம், மார்கத்தில் அனுமதி இல்லாத நல்லமலை செய்ய எந்த மகானுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என மதம் சொல்லுகிறது, அதனால் தட்டிகேட்க எவருக்கும் அருகதையும் தேவை இல்லை. உங்களைப்போன்ற வயிறு வளர்க்கும் ஜாதிகள்தான் அதிகம் அதிகம் இல்லாத பொல்லாதவைகளை மார்கத்தில் இருப்பதாக கூறி, பாமர மக்களை ஏமாற்றி பிளைக்கிறீர்கள். அது ஹறாம் என தெறிந்தும் கடவுளை கொஞ்சம் கூட அஞ்சாமல் உங்களது சுய நலத்தையே பார்கிறீர்கள், அப்படி தேடியவைகள் உடலில் சேறுமா?உங்கள் உடல்தான் சுவனத்திற்கு செல்லுமா?அவைகள் தடுக்கப்பட்டவைகள், நரகின் வெறகுகள் கற்களும் மனிதர்களுமே என்று மதம் சொல்லுகிறது.எத்தனை நாளைக்குத்தான் இப்படி மக்களை ஏமாற்ற முடியும்? முடியாது. உங்களுக்கெல்லாம் முடிவு வெகுதொலைவிலில்லை. உங்களின் சுயனளமே நாட்டின் பிற்போக்குக்கும் காரணம், ஏனெனில் அது நாட்டின் தலைமைத்துவத்திலும் காணப்படுகிறது. திருந்துங்கள், இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள், வெட்கப்படுங்கள், சுயமாக உழைத்து உண்ணுங்கள், பிச்சை எடுப்பதை விட மிக கேவலமானது மக்களை ஏமாற்றி பிலைப்பது.இந்த கத்தமுல் குர்ஆன் கூட எதற்காக? அரசியலின் பெயரால் மக்களை ஏமாற்றி, காலம் காலமாக வோட்டு கேட்பதற்காக. அவரோ மரணித்து விட்டார், அவரின் பெயரால் நீங்கள் எல்லோரும்தானே பிச்சை கேட்கிறீர்கள், நீங்களெல்லாம் கட்சியின் பெயரால் பிளவு பட்டு ஒருத்தனை ஒருத்தன் வஞ்சித்து குறோதம் காட்டி, பகைமையை உண்டுபன்னி நாசமாகப்போகும்படி உங்கள் மாமனிதர் அப்போது சொன்னாரா?சொன்னதால்தான் இப்படி செய்கிறீர்களா? உங்களின் மாமனிதருக்கு உங்களின் எந்த மனிதனும் அருகில் நிற்கக்கூட தகுதி அற்றவர்கள், உங்களின் மாமனிதரின் திறமைகளை நாமும் அறிவோம்.

    ReplyDelete
  4. Dear Shajahan,
    உங்கள் உளறல்கலுக்கு எல்லாம் ரிப்லை எழுதுவது முட்டாள்தனம். அதனால் இத்தோடு கடைசியாக எழுதுகிறேன். நீங்கள் எல்லாம் அடுத்தவர்களை மட்டமாக கருதுகிறீர்கள். உங்களிடம் இஸ்லாம் பெயருக்கு மாத்திரம் தான். நீங்கள் மக்கள் மத்தியில் பித்னா ஏற்படுத்தும் குழப்பவாதிகள்.
    Rilwan Ghazali
    P.O Box 5863
    Jeddah 21432
    KSA
    00966 544614992

    ReplyDelete
  5. ஆடத்தெறியாதவள் அரங்கத்தை குறைகூறுவதுபோல், ஏதேதோ கூறி, விளகி விடுகிறார் மிஸ்டர். றிள்வான் கஸாலி. இந்தக்காலத்திலும் இவரைப்போல இலம் பராயத்தினர் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருந்து கொண்டு இஸ்லாத்தை அறியாதவர்களாக இருப்பதை விட நஷ்டம் எதுவுமில்லை, அது அவர் மரணிக்கும் வரைக்கும் தெறியவும் வாய்ப்பில்லை. இவருடைய மனோபாவத்தைக்கொண்ட சமூகம் இற்றைக்கு 60-70 வயதினரை ஒப்பிடலாம், ஏனெனில் அவர்களின் காலத்தில்தான் இஸ்லாம் மறுமலர்ச்சி பெறவில்லை, அதன் ஆழம் அகலம் எல்லாம் எமக்கு புறியக்கூடிய மொழியில் அன்று வியாபிக்கப்படவில்லை. ஆனால், இப்போதும் அப்படியா? இல்லவே இல்லை. இஸ்லாத்தை கண்மூடித்தனமாக பின்பற்றி ஹறாத்தைக்கொண்டு இப்படி பொல்லாதவைகளை இல்லாதவைகளை செய்து உங்கள் வயிருகளை வளர்க்காமல் பிரருக்கும் தன்னை முன்மாதிறியாக பொருப்புடன் இறைவனுக்காக மார்க்கத்தில் நடந்திட முயற்சி செய்யுங்கள். சவூதி ஆரேபியாவிலுள்ள உங்களுக்கு எத்தனையோ பல விடயங்கள் மார்க்கமாக தெளிவாக காணக்கிடைக்கும், எத்தனையோ மக்கள் சவூதியிலிருந்து நேர்வழி பெற்றுள்ளார்கள். நேர்வழி கிடைப்பது உங்கள் கையிலில்லை, அறிவைத்தேடுவதும் நன்மை செய்வதும் எமது கடமை. ஏற்றுகொள்ளப்படுவதும் நேர்வழி கிடைப்பதும் அவனைப்பொருத்து. திருந்துங்கள், மார்கத்தில் பெண்களே முன்னேறிய இக்காலத்தில் நீங்கள் இன்னும் அவர்களை விட பின்னோக்கி இருப்பது,பரிதாபம், இது உங்கள் குடும்ப வாழ்கையையும் பாதிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.