Header Ads



மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் - இலங்கைக்கு 137 ஆவது இடம்

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் இலங்கை 137 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதன்படி நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பு நாடுகளில் 156 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை இறுதி 20 நாடுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதலிடத்தை டென்மார்க்கும்  இறுதியில் மாலி, உகண்டா, பலஸ்தீனம், சூடான்,  சிம்பாவே மற்றும் கெயிட்டி ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.

இதேவேளை, இலங்கையில் உள்ள மக்கள்  சுனாமி மற்றும் உள்நாட்டு யுத்தங்கள்  என்பனவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கையில் மன அழுத்தம் அதிகமான மக்கள்  உள்ளதாக அறிக்கைகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. அவற்றின் அடிப்படையில் தெற்காசியாவில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில்  இலங்கையே இறுதியாக உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சுனாமி வந்திச்சோ என்னவோ அதன்பின் வெளினாடுகளின் உதவியோடு பாரிய அபிவிருத்தி உண்டானது. அங்கர் பால்மாவினால் ரொட்டி சுட்டு சாப்பிடுமளவிற்கு காலம் இருந்தது என்றால் பாருங்கோவன்.

    யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆனால் மக்கள் இன்னும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சரித்திரம் காணாத கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள். இராணுவத்தினரே கொலையிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுகின்றார்களென்றால் பாருங்கவேன்.

    அரசியல் வாதிகள் தீவிரவாதிகளின் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். நாட்டிலுள்ள தலைவர்கள் தமது பொறுப்பு என்ன, தனது கடமை என்ன என்று தெரியாமல் தான் நினைத்தவாறெல்லாம் நடக்கின்றார்கள். ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றார்கள், முழங்காலில் இடப்படுகின்றார்கள். பள்ளிவாயில்கள் உடைக்கப்படுகின்றன, கோயில்கள் உடைக்கப்படுகின்றன, தேவாலயங்கள் உடைக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்கள், தாக்கப்படுகின்றார்கள், பயமுறுத்தப்படுகின்றார்கள்.

    இதற்கும் மேலாக காவி உடை அணிந்தவர்கள் பயங்கரவாதச்செய்லில் ஈடுப்டுகின்றார்கள். அதற்கு அரசாங்கமே அணுசரணை வழங்கி ஆசிவழங்கி வருகின்றன. இவைகளை ஆதார பூர்வமாக எடுத்துச்சொல்லியும் அரசாங்கம் காரியத்தை கண்ண்டு கொள்ளவே இல்லை.

    நாட்டு மக்களின் முக்கிய தேவைகளுக்கு குரல் கொடுத்தால் அரசாங்கம் மக்களை சுட்டுக்கொல்கின்றது. அந்தக்குற்றத்தை மறைக்க அரசாங்கம் விசாரணை என்ற பெயரில் கண்மூடித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நடந்துகொள்வது மக்களை ஏமாற்றுவதற்காக என்றெண்ணி அவர்களே ஏமாந்து நிற்கும் அவல நிலையும், தேர்தல் காலங்களில் மட்டும் நல்லவர்களாக நடக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் படுக்கை பாய் சுருட்டிக்கொண்டு வீடு திரும்பும் நாள் மிகவும் பக்கம்.


    மேற்கூறப்பட்ட அனைத்தும் நாட்டின் தலைவரின் தவறினால்தான் நடக்கின்றதே தவிர வேறில்லை. இலங்கையின் வரலாற்றில் இதுவர கண்டிராத குற்றச்செயல்களும் நாடு பாதாளத்தையும் படுமோசமான வீழ்ச்சியையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஆனால் சகல சமூக மக்களும் இன்று நிலைமையை நன்கு உணர்ந்துள்ளார்கள் இனிவரும் பொதுத்தேர்தல்களிலும் ஏனைய தேர்களிலும் மக்களின் முடிவுகளை காட்டுவார்கள். தேர்தல் மோசடிகளிலும் ஈடுபடுவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகுவோம்.


    குற்றச்செயல்களில் அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் ஈடுபடும்போது நாட்டு மக்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.