துருக்கியில் 1,200 ஆண்டு பழைமையான அல்குர்ஆன் கையெழுத்து பிரதி கண்டுபிடிப்பு
(Tn) துருக்கி பள்ளிவாசல் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புனித அல் குர்ஆன் கையெழுத்து பிரதி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அகினா கரையோர நகரான பொட்ருமில் இருக்கும் பள்ளிவாசல் ஒன்றின் அடித்தளத்தில் இருந்து அந்த பள்ளிவாசலின் இமாம், அல் குர்ஆன் கையெழுத்து பிரதி மற்றும் ஒருசில குர்ஆன் விளக்க நூல்களையும் கண்டெடுத்துள்ளார். இது தொடர்பில் பொட்ரும் தலைமை முப்திக்கு அந்த இமாம் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த குர்ஆன் பிரதி வரலாற்று ஆய்வாளர்களின் தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அது சுமார் 1,200 ஆண்டு பழைமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த குர்ஆன் பிரதி துருக்கி சூழல் மற்றும் தொல் பொருள் நூதனசாலை அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment