மேல் மாகாணத்தில் தொடர்ந்து 12 நாட்களுக்கு மின்வெட்டு
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 12 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை காலையில் இரண்டு மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி மேற்படி நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் காலை 10.30 மணி வரை இந்த மின்வெட்டு அமுலிலிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம , அம்பலாங்கொட, ஹொரண , களுத்துறை , பண்டாரகம , ஜயவர்த்தனபுர , இரத்மலானை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Post a Comment