Header Ads



மாவனல்லையில் 116 வயதுடைய மூதாட்டி


1897.10.22ஆம் திகதி மாவனல்லை, பலத்கமவில் பிறந்த அப்புலன்லே உக்கு என்ற 116 வயதுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அம்மையார் இலங்கையிலேயே ஆகக்கூடிய வயதுடைய பெண்ணாக இருக்கலாம் என நம்பப்படுகிறார்.

இவர் இலங்கையில் சிரேஷ்ட பிரஜையாகவும் கருதப்படுகிறார்.  இந்த அம்மையாரின் இல்லத்துக்கு நேற்று விஜயம் செய்த சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா அன்னாரின் சுகம் விசாரித்துடன் அவரது தேவைகளுக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கினார். 

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் ,.சமூக சேவைகள்  பணிப்பாளர் அனூஷா கோகுல மற்றும் மாவனல்லை பிரதேச செயலாளர் ஆகியோரும் இந்த நிகழ்வில்  கலந்துக் கொண்டனர். 

No comments

Powered by Blogger.