Header Ads



ப்ரிட்ஜ் வாங்குவதற்காக 11 வயது மகளை விற்ற பெண்

அர்ஜென்டினாவில் உள்ள பியூனர்ஸ் அயர்ஸ் அருகே பெர்னல் என்ற இடத்தில் உள்ள கிளான்டஸ்டைன் என்ற அலுமினிய ஆலையில் இளம் பெண்களை அடைத்து  வைத்து சித்ரவதை செய்வதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு  அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அர்ஜென்டினாவில் உள்ள பியூனர்ஸ் அயர்ஸ் அருகே பெர்னல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பப்லா செசரினா மன்ஜோன் (32). இவருக்கு 11 வயதில் மகள் உள்ளார்.  இந்நிலையில் செசரினா மன்ஜோனின் பக்கத்துவீட்டுக்காரர்கள் தங்களிடம் உள்ள ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு பொருட்களை விற்க விரும்பினர்.

இந்த தகவல் பப்லா செச ரினா மன்ஜோனுக்கு தெரியவந்தது. எனவே ப்ரிட்ஜ் மற்றும் சில பொருட்களை தான் வாங்கிக் கொள்வதாக பப்லா செசரினா மன்ஜோன் தெரிவித்துள்ளார். அதற்கு ம £ற்றாக தனது 11 வயது மகளை பக்கத்துவீட்டாரிடம் விற்று விட்டு ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டார்.

அவர்கள் சில நாட்கள் கழித்து அந்த அலுமினிய ஆலை உரிமையாளரிடம் அந்த சிறுமியை விற்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு வழிகளில் கொண்டு வரப்பட்ட இளம்பெண்கள் அங்கு பலாத்காரம் செய்யப்பட்டது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.