புத்தளத்தில் வாக்குச்சீட்டு மீட்பு தொடர்பில் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு
(Nf) புத்தளம் சென் அன்ரூ கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் கைவிடப்பட்டிருந்தமை தொடர்பில் மேலும் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கெண்ணும் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வாக்கெண்ணும் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயரதிகாரி மற்றும் கம்பஹா உதவி சமுர்த்தி ஆணையாளர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்ய்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனெவிரத்ன கூறியுள்ளார்.
இதற்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அமைச்சிடம் முறையிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment