நரேந்திர மோடி சார்பில் 10 ஆயிரம் பர்தாக்களுக்கு ஓடர்
(Thoo) பா.ஜ.க. சார்பில் போபாலில் புதன்கிழமை நடைபெறவுள்ள “மகாகும்ப” நிகழ்ச்சிக்காக பர்தா (முஸ்லிம் மகளிர் அணியும் கண்ணியமிக்க ஆடை) வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் “காரியகர்த்தா மகாகும்ப” நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி உரையாற்றுகிறார். இது தொடர்பாக இந்தூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை திக்விஜய் சிங் கூறியது,
மகாகும்ப நிகழ்ச்சியில் பங்கேற்கும் கட்சியினருக்காக 10 ஆயிரம் பர்தா வாங்க ஆளும் கட்சியான பா.ஜ.க. ஆர்டர் கொடுத்துள்ளது. இவற்றை தைத்துக் கொடுக்க ஜீனத் டெய்லர்ஸ் என்ற நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.
இதற்கான தையல் கூலியை “திலீப் பில்ட்கான்” என்ற ரியஸ் எஸ்டேட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவேந்திர ஜெயின், இந்தூருக்கு நேரில் வந்து தையல் கூலி முன்பணமாக ரூ. 42 லட்சத்தை ஜீனத் டெய்லர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
அப்போது மொத்த தையல் கூலி இந்திய ரூ. 44.60 லட்சத்துக்கான ரசீது அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதோ ஜீனத் டெய்லர்ஸ் நிறுவனம் வழங்கிய ரசீது. (ரசீதை நிருபர்களிடம் காட்டுகிறார்).
இதன் மூலம் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. திலீப் சூரியவன்சி என்பவருக்குச் சொந்தமான இதே ரியஸ் எஸ்டேட் நிறுவன வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூனில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
அப்போது அதன் இயக்குநர் தேவேந்திர ஜெயினுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது என்றார் திக்விஜய் சிங். இதற்கிடையில் மத்திய மின் துறை இணை அமைச்சரும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழு தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியது,
டெல்லியில் திங்கள்கிழமை நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவராஜ் சிங் சவுஹான், பல விஷயங்கள் குறித்துப் பேசினார். ஆனால், பர்தா வாங்கிய விவகாரத்தில் அக்கட்சியின் நிலைமை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி அணிந்துள்ள முகமூடி அகற்றப்பட வேண்டும் என்றார் அவர்.
அதேவேளையில் பர்தா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் திக் விஜய்சிங் காட்டியது போலியான ரஷீது என்று பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பர்தா அணிந்த பெண்களை காண முடிகிறது. மோடியின் முஸ்லிம் எதிர்ப்பு இமேஜை மாற்ற, பணம் கொடுத்து பர்தா அணிய வைத்து பெண்களை அழைத்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது.
பா.ஜ.க.வின் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வரும் முஸ்லிம்கள் கட்டாயம் தொப்பி அணிய வேண்டும் என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.
இதற்கு முன்பு ஜெய்ப்பூரில் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொப்பி மற்றும் பர்தாக்களை விநியோகித்து பயணச் செலவு, உணவு ஆகியன வழங்கியதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
Post a Comment