Header Ads



தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் சேவையில் உள்ள ஆசிரியர்கள் இடம்மாற்றம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல் சேவையில் உள்ள ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது குறித்து கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாவது,

ஒரு தேசிய பாடசாலையில் தொடர்ச்சியாக  பணிபுரியும் ஆசிரியர்களின் சேவைகளை ஏனைய தேசிய பாடசாலை மாணவர்களும் பெற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தும் பொருட்டு, ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இதன் நிமித்தம், ஒரு தேசிய பாடசாலைகளில் 20 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஏலவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களை அடுத்த வருடம் ஜனவரியில் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவுகள் தற்போது சகல தேசிய பாடசாலைகளிலுமிருந்து பெறப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் மொழி மூலம்  கற்பிக்கும் 88 தேசிய பாடசாலைகள் அடங்கலாக  350 தேசிய பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments

Powered by Blogger.