Header Ads



பொலீசாருடன் துப்பாக்கிச் சண்டை போட்ட 107 வயது முதியவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை போட்ட 107 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள பைன் பிளப் என்ற இடத்தில் வசித்தவர் மோன்ரே இசாதோர். இவருக்கு வயது 107. இவர் அடிக்கடி அக்கம் பக்கத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு இதே போல் நடந்து கொள்ளவே அக்கம் பக்கத்தினர் கண்டித்தனர். இதனால் மோன்ரே இசாதோர் ஆத்திரம் அடைந்தார். தன்னை யாராவது பிடிக்க வந்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று ஆத்திரமாக கத்தியபடி தனது துப்பாக்கியால் சுட்டு விட்டு கதவை பூட்டிக் கொண்டார்.

இதனால் பயந்து போன அக்கம் பக்கத்தினர் வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் வெளியில் இருந்தபடியே மோன்ரே இசாதோரோடு பேச முயன்றனர். அவரை வெளியே அழைத்தனர். அவர் வர மறுத்துவிட்டார். தன்னை பிடித்தால் சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டியபடியே கதவருகே நின்று கொண்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

ஆனால் போலீசார் அவரை லாவகமாக பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அவரது அறைக்குள் கண்ணீர் புகையை செலுத்தினர். அறை புகை மண்டலமாக மாறியது. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற போலீசார் மீதும் துப்பாக்கியால் சுட்டார். இருதரப்பிலும் மாறி மாறி துப்பாக்கி சண்டை நடந்தது. புகை மண்டலத்தில் யார் யார் மீது சுடுகிறார்கள் என்று தெரியாத நிலை. சிறிது நேரத்தில் சண்டை ஒய்ந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய சோதனையில் தோட்டாக்கள் பாய்ந்து மோன்ரே இசாதோர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.