Header Ads



'பெண் தொழில் வல்லுனர்' (POWER WOMEN 2012 / 2013) விருது தேசப்பந்து ஜெசிமா இஸ்மாயிலுக்கு

(ஏ.எல்.ஜுனைதீன்)

   பெண்களுக்கான முகாமைத்துவ் நிறுவனத்தினால் 2012 / 2013 ஆம் ஆண்டுக்கான 'பெண் தொழில் வல்லுனர்' ( POWER WOMEN 2012 / 2013 ) விருது தேசப்பந்து ஜெசிமா இஸ்மாயிலுக்கு கடந்த 22 ஆம் திகதி  வியாழக்கிழமை மாலை கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் வைத்து வழங்கப்பட்டது.

  சிறுவர் அபிவிருத்தி மற்றும் மளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மற்றும்  கனடா நாட்டுத் தூதுவர் ஷெல்லி வைடிங் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து  இவ்விருதை இவருக்கு வழங்கினர்.

  தொழில் துறைசார் அபிவிருத்திகளையும் பெண்களின் முன்னேற்றங்களையும் ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் தொடக்கம் பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தினால் வருடா வருடம் இவ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



1 comment:

Powered by Blogger.