Header Ads



இணையதள பழக்கத்திற்கு அடிமை - சிறுவயதினருக்கு சிறப்பு முகாம்கள்


நவீன காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஆயினும், சிறுவயதினரும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது.

ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி பத்திரிகை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும், 98,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது ஒரு நோயாகவே காணப்படுகின்றது என்றும், அவர்கள் ஊட்டச்சத்து குறைவாலும், தூக்கமின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை சீர்படுத்தும்விதமாக, ஜப்பான் அரசு சிறுவர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் சிறுவர்கள், இணையதளம், ஸ்மார்ட்போன், மற்றும் வீடியோ விளையாட்டுகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு, விளையாட்டுகளிலும், வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் அவர்களின் டிஜிட்டல் பழக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் வண்ணம், அந்த மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.