'பர்வேஸ் ரசூலின் மனதை யாரும் அதிர்ச்சியாக்க வேண்டாம்'
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூல். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.
15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற பர்வேஸ் ரசூலுக்கு முதல் 4 ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கடைசி ஆட்டத்திலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில முதல்–மந்திரி உமர் அப்துல்லா கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
ஆனால் நேற்று நடந்த கடைசி ஆட்டத்திலும் பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லைல. ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் முதல் காஷ்மீர் மாநில வீரர் என்ற அவரது வரலாறு தள்ளி போனது.
கடைசி ஆட்டத்திலும் பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு அளிக்காததால் உமர் அப்துல்லா அதிருப்தியை வெளியிட்டார். இது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். இதேபோல மத்திய மந்திரி சசிதரூர் இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இருந்தார்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்து கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:–
இந்திய அணிக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டதே மிகப்பெரிய சாதனை. கடினமான உழைப்புக்கு பிறகே பர்வேஸ் ரசூல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
11 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்வு செய்வது தொடர்பாக கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் முடிவு செய்யும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு வீரர்கள் தேர்வு இருக்கும். இதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. இதனால் கவலைப்பட தேவையில்லை. எதிர்வரும் போட்டிகளில் அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இந்த நிலையில் பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லாவுக்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, தயவு செய்து இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. தகுதியின் அடிப்படையிலேயே பர்வேஸ் ரசூல் அணியில் விளையாடுவார். அவரது மனதை யாரும் அதிர்ச்சியாக்க வேண்டாம் என்றார்.
ஜிம்பாப்வே தொடரில் பர்வேஸ் ரசூல் தவிர மற்ற 14 பேருக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஜெய்தேவ் உனகட், ரகானே, புஜாரா, மொகித்சர்மா, அம்பதிராயுடு ஆகிய 5 வீரர்கள் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.
பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை,'' என, கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
ஜிம்பாப்வே சென்ற இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக வென்றது. இத்தொடரில் காஷ்மீர் "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூலுக்கு, ஒரு போட்டியில்கூட விளையாடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதற்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்பிரச்னையில், தனது முடிவை நியாயப்படுத்திய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறியது:
வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது தொடர்பாக வெளியான கருத்துகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் 5 போட்டிகளில் நிறைய பேர் வாய்ப்பு கிடைக்காமல் "பென்ச்சில்' அமர்ந்திருந்தனர். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் ரசூலை சேர்த்திருக்கலாம் என்கின்றனர். என்னை பொறுத்தவரை, ஜடேஜா போன்றவரை நீக்குவது மிகவும் கடினமான விஷயம். பவுலிங்கில் அசத்தும் இவரால் எந்த கட்டத்திலும் விக்கெட் வீழ்த்த முடியும். தவிர, எந்த ஒரு போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பந்துவீச்சில் அதிக மாற்றங்களை செய்ய விரும்பாததால் தான், ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. இது, துரதிஷ்டவசமானது. அடுத்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய "ஏ' அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். இத்தொடரில் நிறைய போட்டிகளில் பங்கேற்று போதிய அனுபவம் பெறுவார்.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.
Post a Comment