புல்மோட்டையில் நிலங்கள் தொடர்ந்து கபளீகரம்
(அன்வர்)
புல்மோட்டை மண்கின்டி பகுதியில் இன்று 21-08-2013 மீண்டும் 200 க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை கடற்படையினரர் வசமெடுப்பதற்காக பிரதேச செயலாளரினால் அப்பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு அறிவிக்கப்படாமல் நில அளவை திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டு நில அளவை கடற்படையினரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தோட்டப்பயிர் செய்து செங்கற்சூலை உற்பத்தி செய்து வீடுகள் கிணறுகள் அமக்கப்பட்டு மக்கள் தமது ஜீவணோபாயத்தை நடத்தி வந்தவேளை அப்பகுதி உட்பட அண்டிய பிரதேசங்களாக சுமார் 22யு 2சு 29.3 பேர்ச் PடுஊஃநுPஃளுரசஃ01ஃ16 இலக்க வரைபட மூலம் ஏக்கர் மட்டுமே கடற்படையினருக்காக பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது ஆனால் கிட்டத்தட்ட 80 க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் அதனோடு சேர்த்து அடைக்கப்பட்ட அதேவேளை கடற்படை முகாமுக்கு முன்னால் தோட்டப்பயிர் செய்து கற்களால் கட்டபப்பட்ட கிணறுகள் வீடுகள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து குடும்பங்கள் பலாத்காரமாக கடற்படையினரால் வெளியேற்றப்பட்டு இன்று அவ்விடத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டு அதை சுற்றி கட்டிட வேளைகள் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளை தவிர இன்று நில அளவை குறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்திலுள்ளனர்
இவ்வாறு கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான ஒப்பமுள்ள காணிகள் பொன்மலைக்குடா பகுதியில் பலவந்தமாக பிடிக்கப்பட்ட நிலையில் சிறிய கடற்படை முகாம் அமையபெற்றுள்ளது அரிசிமலையை அண்டிய பகுதியில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக Nநுர்சுP நிறுவத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட நான்கு வீடுகளிலுள்ளவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முற்கம்பிகள் போட்டு தடுக்கப்பட்டு இன்னும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டும் விடுவிக்கப்படாமை குறித்தும் எமக்கு இது இப்பிரதேச மக்களின் அடிப்டை உரிமைகள் மீறப்படுவது மாத்திரமன்றி தொடரான இந்நிலை காரணமாக மக்கள் குழப்ப நிலையிலுள்ளனர்
கடந்த திங்கற்கிழமை 14ம் கட்டை பகுதியில் நாக விகாரைக்காக சுமார் 500 ஏக்கர் அளவை மேற்காள்ள வந்தவேளை பொதுமக்கள் வீதிக்கு இறங்கியநிலையில் அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எங்கய்யா போயிட்டாங்க தேர்தல் விளம்பரம் போட்டிருக்கிற கட்சித் தலைவர்கள் எல்லாம்?
ReplyDelete-புவி றஹ்மதழ்ழாஹ், காத்தான்குடி-