Header Ads



யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீளமுடியாமல் இருக்கின்றோம் - றிப்கான் பதியுதீன்

(எ .ஆர் .எம் .ஹலீம்)

மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு எக்கட்சியாலும் எதையும் சாதித்துவிட முடியாது. மன்னார் மாவட்டத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அரசாங்கக்தை முழுமையாகப்பலப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 மன்னார் மாவட்ட மக்களின் விடிவை தீர்மானிக்கப்போவது மக்களின்தெரிவிலேயே தங்கியுள்ளது. இது சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் சுமார் 30 வருடங்களாக நாம் பல்வேறு கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்துள்ளோம். இதுவரை காலமும் யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீளமுடியாமல் இருக்கின்றோம். மன்னார்மாவட்டமும் ஏனையமாவட்டங்களைப்போன்று அபிவிருத்தி அடைய வேண்டும். 

மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்; நமது மாவட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இன மத வேறுபாடுகளை மறந்து இப்பகுதியை முழுமையாக கட்டியெழுப்ப நாம் அனைவரும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.   
எனது சகோதரரான அமைச்சர் றிஸாத் பதியதீன் தலைமையின் கீழ் மன்னார் மாவட்டம் மறு மலர்ச்சி பெற்று வருகின்றது அமைச்சரின் மக்கள் பணியில் இனம் மதம் பாராது சேவையாற்றி வருகின்றார். நான் அவரின் சேவையில் தோளோடு தோள் நின்று மன்னார் மாவட்டத்திற்கு சேவையாற்றி வருகின்றேன்.
எனது மக்கள் சேவை பணியை மேன்மேலும் தொடர்வதற்கு உங்களின் ஆதரவினை கேட்டு நிற்கின்றேன். மாகாண சபை என்பது அபிவிருத்தியை நோக்கமாக கொண்டதாகும். எமது பலம் மத்திய அரசாங்கத்திலும் உள்ளது. இதனால் மன்னார் மாவட்ட அபிவிருத்தி இலக்கினை மிக இலகுவாக அடைந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. குடும்ப ஆட்சியா மன்னர் ஆட்சியா

    ReplyDelete
  2. ஆமாம். அரசாந்கத்தை முழுமையாகப்பலப்படுத்த வேண்டும் அப்பதான் இருப்பதையும் விட்டுக்கொடுக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.