கல்முனை பொது நூலகத்தை புறக்கணித்ததேன்..?
(எம்.எம்.ஏ.ஸமட்)
கல்முனை தென்கிழக்கின் முக வெற்றிலை என வர்ணிக்கப்படுகிறது. மூவின மக்களும் வாழுகின்ற கல்முனைப் பிரதேசம் தென்கிழக்குக்கு கல்வி ஒளியேற்றும் மாநகராகவும் விளங்குகிறது. ஆனால் இப்பிரதேசம் பல்வேறு துறைகளில் அபிவிருத்தியைக் காணததொரு மாநகராக இருப்பதே கல்முனைப் பிரசே மக்களின் நீடித்த ஆதங்கமாகும்.
முறையான ஒரு விளையாட்டு மைதானம் இன்னும் அமைக்கப்படவில்லை. சகல வசதியும் கொண்ட சிறுவர் பூங்கா இன்னும் பூக்கவில்லை. பஸ் நிலையங்கள் இருந்தும் அவற்றில் போதிய பௌதிக வளமில்லை. இவ்வாறு பல குறைபாட்டுத் தொடரைத் தன்னகத்தை கொண்டுள்ள கல்முனை மாநகரம் பூரணத்துவமுடையதொரு நூலகத்தையேனும் கொண்டிருக்காமை இப்பிரதேச மக்களி;னதும் வாசகர்களினதும் கல்விச் சமூகத்தினதும் உள்ளங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
நூலகம் என்பது தனி நபர்கள், பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அரசினால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும்.
மரபு வழியான நோக்கில் நூலகம் நூல்களின் சேமிப்பு எனலாம். இந்த நூல்களையும் வேறு மூலங்களையும் சேவைகளையும் இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காக தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன் நவீன நூலகங்கள் நுண்படலம், நுண்சுருள் தகடு, ஒலிநாடாக்கள், இருவட்டுக்கள், ஒலிப்பேழைகள் என்பவற்றில் பதியப்பட்ட நிழப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள் என்பவற்றைச் சேமித்து வைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன.
இன்றைய நவீன நூலகங்கள் பல மூலங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றி பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன.
இந்தவகையில், கல்முனைப் பிரதேசத்துக்கொரு நூலகம் அவசியம் என்று உணர்ந்த முன்னால் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் கல்முனைக் பொது நூலகத்துக்கான அடிக்கல்லை 1977ஆம் ஆண்டு நட்டி 1981ஆம் ஆண்டு அவராகவே கட்டித் திறந்து வைத்தார். இன்றும் முன்னால் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரை கல்முனைப் பொது நூலகம் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அவ்வாறு தூரநோக்கு சிந்தனையோடு கட்டித்திறப்பட்டு பல குறைபாடுகளோடு இன்று பழிசொல்லுக்கு ஆளாகியுள்ள, ஏறக்குறைய 32 வருடங்களைக் பூர்த்தி செய்;துள்ள இந்நூலகத்தை ஏன் இது வரை இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் திருப்பிப் பார்க்காது புறக்ககணித்துள்ளனர் என்ற கேள்வி இப்பிரதேச மக்கள் மனங்களில் தொக்கு நிற்கிறது.
இப்பிரதேச மக்களின் வரிப்பணம் இப்பிரதேச அதிகார சபைக்குக் கிடைக்கின்ற போதிலும், இப்பணம் இப்பிரதேச மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படாது அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் எந்தப் பிரதேசங்ளை மையப்படுத்தியுள்ளதோ அந்தப் பிரதேசங்களின் பொது நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுவது எந்த வகையில் நியாயமாகும் என்ற கேள்வியும் கல்முனைப் பிரதேச மக்களிடம் எழுவது நியாயமானதுதான்
கல்முனை நூலகத்தின் அவல நிலையை நேரில் சென்று பார்ப்பவர்களின் வேதனைக்கும் அந்நூலகத்தை அபிவிருத்தி செய்ய தன்னிடம் அரசியல் பலம் இல்லையே என்று ஏங்கும் அதன் ஸ்தாபகர் முன்னால் அமைச்சர் ஏ.ஆர்.எம் மன்சூரின் கவலைக்கும் விரைவில் விடை காணப்படுவது அவசியம்.
நூலகத்துக்கு ஒரு பெயர் பலகையில்லை, நூகத்துக்கு மதிலோ கேற்றோ இல்லை. நூல் இரவல் பகுதி மற்றும் வாசிப்புப் பகுதிகளில் இருக்கின்ற நூல்களில் பெரும்பாலானவை ஏறக்குறைய 30 வருடங்கள் பழமை வாய்ந்தவை. ஆனால் அப்புத்தகங்கள் எல்லாம் புதுச் சாரி உடுத்தாற்போல் புதிய உறைகளைத் தாங்கி நிற்கின்றன. மழை காலங்களில் நூலக அறைகளில் இருப்பவர்கள் குடைபிடித்துக்கொண்டே கடமை செய்ய வேண்டும். கணணிப் பிரிவில் ஒரேயொரு கணணி மாத்திரம் உள்ளது. கேட்போர் கூடம் புழுதி படிந்த கூடமாகவே காணப்படுகிறது. எப்பொழுதில் நூலகத்தின் எந்தப் பகுதி இடிந்து விழுமோ என்ற நிலையில் நூலகக் கட்டப் பகுதிகள் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இவ்வாறு எண்ணற்ற குறைகளைச் சுமந்து கல்முனைப் பொது நூலகம் காட்சியளிப்பதாக வாசகர்கள் கூறுகிறார்கள். இந்நூலகத்தின் இந்நிலையானது கல்முனைப் பிரதேசத்தின் கல்விச் சமூகத்தை மிக வேனைக்குட்படுத்தியுள்ளது.
இப்பிரதேசத்தின் அனைவரதும் கல்வி அறிவுத் தேடலுக்காய் உருவாக்கப்பட்டு இன்று கவலையளிக்கும் வண்ணம் காட்சிகொடுக்கும் கல்முனைப் பொது நூலகம,; கல்முனைப் பிரதேச மக்களின் வரிப்பணத்தைக் கொண்டாவது அபிவிருத்தி செய்யப்படவில்லை. மாறாக அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் எந்தந்தப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நூலங்களை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதில் உண்மையிருக்குமாயின் அத்தவறானது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
எது எவ்வாறு இருந்தாலும், மக்களின் ஆதங்கங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு, அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் ஒன்றிணைந்து எல்லோருக்கும் பொதுவான கல்முனைப் பொது நூலகத்தை அபிவிருத்தி செய்து நாட்டிலுள்ள நவீன நூலகங்களின் தரத்துக்கு தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே கல்முனை பிரதேச வரியிருப்பாளர்களினதும் கல்விச் சமூகத்தினதும் ஏனையவர்களினதும் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்போடு, நவீன கல்முனைப் பொதுநூலக்தைக் காணுவதற்கான காலம் கனியும் வரை காத்திருக்கிறது கல்முனைக் கல்விச் சமூகம்.
ITHU AMPARAI MAVATTATHTHIN MUTHAL NOOLNILAYAM,
ReplyDeleteATHEPOL KALMUNAIKUDY (sahib road) NOOLNILAYAMUM PALAMAYANATHU,
INRU ANTHA NOOLNILAYAMUM ATHANUDAN IRUNTHA ARYURVETHA VAITHTHIYASALAYUM IRUNTHA IDAM THERIYAMAL ALIKKAPPATTULLATHU,
ITHARKKU KARANAM YAAAAAAAR......................
MUNNAL MAYAR INNAL MP HAREESTHAN,
THANATHU SAHAVIN VEETTUKKU VALEUM PATHAUM KODUTHTHU ATHANAL NALONRUKKU 100 NAFARKALIM ILAWASA MARUNTHAI THADAI SEITHULLATHODU,
EALAI MANAVARKALIN VASIPPILUM MANNAI POTTULAR,
ITHU PARRY EMATHU D/MAYOR
Intha noolaham purakkanikkappattathu sirasmayarukku mun iruntha hareesin kalaththilthan.
ReplyDeleteAmparai mavavattaththil tharam koodiya noolaham ithu.ippothu tharam kunre kanappadukirathu.
Ithepol kalmunaikudy sahibu veethy noolakamum,ayurvetha vaiththiya salayum tharpoluthu thadayam.theriyamal kidppathu ean?.karanam harees thanathu Saha Jabbarukku valium,pathaum kuduththathalthan.illavittal sonar 100 ealai noyalihalukku marunthu nalantham kidaththirukkum.
Allah intha aniyayakkararkalukku mahathtana koolykalai alli valankuvanaha...............ameen