Header Ads



உலமா சபையை விமாசிப்பது சரியா..??

(சுவைர் மீரான்)

இலங்கையில் இவ்வருடம் சஹ்பான் மாதம் 29 நாட்களில் முடிவுற்று, ரமழான் நோன்பு ஆரம்பமான பொழுது, சனிக்கிழமை பெருநாள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது ஊர்ஜிதமானது.

நோன்பு ஆரம்பமாகி ஓரிரு வாரங்களிலேயே பெருநாள் வியாழக்கிழமை வருமா, வெள்ளிக்கிழமை வருமா என்ற வாதமும் உள்ளூர் முஸ்லிம்கள் மத்தியில் ஆரம்பமாகி விட்டிருந்தது.

"வெள்ளிக்கிழமை பெருநாள் வந்து இரண்டு குத்பா நடைபெற்றால் நாட்டின் தலைவருக்கு நல்லதல்ல, ஆகவே எப்படியும் வியாழக்கிழமை பெருநாளை எடுக்க வைத்து விடுவார்கள்" என்று சாஸ்திர மூட நம்பிக்கை அடிப்படைகளைக் கருத்தில் கொண்டு ஒரு சாராரும், "வியாழக்கிழமை பெருநாள் வந்தால், லீவுக்கும் இல்லாமல், வேலை நாளுக்கும் இல்லாமல் தொய்வடைந்த இரண்டும் கெட்டான் நிலைக்கு வெள்ளிகிழமை ஆகிவிடும், ஆகவே வார இறுதியுடன் சேர்ந்து மூன்று நாட்கள் லீவு வரும்படியாக வெள்ளிக்கிழமை தான் பெருநாள் என்று அறிவிக்க வைப்பார்கள்" என்று வர்த்தக, பொருளாதார  அடிப்படைகளைக் கருத்தில் இன்னொரு சாராரும் கருத்து சொல்லிக்கொண்டு இருந்தனர்.

இப்பொழுது அந்த எதிர்பார்த்த நாளும் வந்து, பெரும் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.

கிண்ணியாவில் பிறை தென்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ள நிலையிலும், உலமா சபையின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாக மேலோட்டமான பார்வைக்குத் தென்படுகின்றது.

இந்த நிலையில், முகநூல்களிலும், வலைத்தளங்களிலும் மட்டுமின்றி, தொலைபேசி உரையாடல்களிலும் உலமா சபை மிக மோசமாக விமர்சிக்கப் பட்டு, உலமா சபையின் மதிப்பு முஸ்லிம்களின் மனதில் இருந்த இடத்தில் இருந்து அதள பாதாளத்தை நோக்கி விழுந்துகொண்டு இருக்கும் ஒரு நிலையை காணக் கூடியதாக உள்ளது.

கூட்டத்துடன் கோவிந்தா என்று நாமும் சேர்ந்துகொண்டு உலமா சபையை விமர்சித்து, இரண்டில் ஒன்று பார்த்தாகவேண்டும் என்று கோதாவில் குதிப்பதை விடுத்து, இந்த தீர்மானத்தை உலமா சபை மேற்கொண்டமையின் பின்னணியில் இருக்கக் கூடிய சதிகள் குறித்தும், அதன் பின் விளைவுகள் சற்று சிந்திக்க வேண்டும்.

உலமா சபை திட்டமிடப் பட்ட வகையில் ஒரு இக்கட்டில் தள்ளிவிடப் பட்டுள்ளதாகவே உணர முடிகின்றது.

 ஹலால் இலட்சினைப் பிரச்சினையில் ஆரம்பித்து, உலமா சபையை இல்லாமலாக்க இலக்கு வைத்து இனவாத சக்திகள் காய் நகர்த்த ஆரம்பித்தன.

பேரினவாத சக்திகள் போற்றிப் புகழும் பாரம்பரிய முஸ்லிம்கள் என்ற இஸ்லாமிய அடிப்படை சாரா குறுகிய வட்டத்துக்குள் உலமா சபை அடங்காத நிலையில், உலமா சபையை பலமிழக்க வைத்து செயலிழக்கப் பண்ண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதனை ஊடகங்கள் மூலம் அறிய முடியுமாக உள்ளது.

பேரினவாத சக்திகளின் உள்நாட்டுப் போஷகர்கள் யார் என்பதனை அனைவரும் அறிந்த நிலையில், குறித்த போஷகர்கள், ஏற்கனவே பலவீனப்பட்டுள்ள உலமா சபை மீது பாரிய ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்து, மிகத் தெளிவாக அனைவரும் உணரும்படியான தவறான முடிவொன்றை பெருநாள் போன்ற முக்கிய விடயத்தில் மேற்கொள்ள வைத்து, அதன் மூலம் முஸ்லிம்களைக் கொண்டே உலமா சபையை தூக்கி ஏறிய வைத்து தமது இலக்கை அடைந்து கொள்ளும் சாத்தியம் மிகத் தெளிவாகவே உள்ளது.

வெள்ளிக்கிழமை பெருநாள் என்கின்ற தவறான முடிவை சர்ச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்ட நிலையில், உலமா சபையின் முக்கிய பிரமுகர்கள் தொடர்புகொள்ளப் பட முடியாத நிலையில் உள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் கூட உலமா சபைத் தலைவரை தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது எனும் பொழுது, இந்த சர்ச்சைக்குரிய முடிவின் பின்னணியில் சதிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் மறுக்கப் படுவதற்கில்லை.

ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமும் கிண்ணியாவில் தென்பட்ட பிறை சரி என்பதனை ஏற்றுக் கொண்டு, உலமா சபையின் முடிவை நிராகரித்து பெருநாளைக் கொண்டாடுவதோ, அல்லது நோன்பும் இன்றி பெருநாளும் இன்றி இரண்டும் கெட்டானாக இருப்பதோ இன்னொரு கோணத்தில், தலைப்பில் அணுகப்பட வேண்டிய விடயம்.

எனினும், இந்த சந்தர்பபத்தில் உலமா சபையை மேலும் பலவீனப்படுத்தி, அதன் வீழ்ச்சிக்கு துணை போவது, கோடாரிக்கு மரம் காம்பு கொடுத்தது போன்றாகி விடும்.

இன்றைய திகதியில் உலமா சபை சற்று பலமிழந்து காணப்பட்டாலும், இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இதே நிலைமைதான் தொடர்ந்தும் இருக்க அல்லாஹ் அனுமதிக்கப் போவதில்லை என்னும் பொழுது, நாளை உலமா சபை வீரியம் கொண்டெழுந்து செயல்படும், இன்ஷா அல்லாஹ். ஆகவே அதற்காக வேண்டி, உலமா சபையை பாதுகாப்பது நமது பொறுப்பும் கடமையும் ஆகும். 

இன்று நாட்டில் உள்ள 99% பள்ளிவாசல்கள் உலமா சபையின் வழிகாட்டலின் படியே செயற்படுகின்றன. சுமார் 100 வருட பாரம்பரியம் மிக்க உலமா சபையை நாம் இழந்தோம் என்றால், நமது மார்க்க விடயங்கள் அனைத்தினதும் முடிவுகள் புத்த சாசன அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

நாட்டில் நிலைமை மாறினாலும், எதிர்காலத்தில் இன்னொருதடவை உலமா சபை போன்ற நமக்கான அமைப்பொன்றை கட்டியெழுப்ப முடியாமலே போகலாம்.

உலமா சபை தொடர்ந்தும் சிறிது காலத்திற்கு ஒரு சில தவறான முடிவுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப் படலாம். நாம் தவறான முடிவுகளை மட்டும் தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு, உலமா சபையைப் பாதுகாப்போம், இன்ஷா அல்லாஹ் நமக்கென்று ஒரு நாளின் உதயம் காத்திருக்கும், அந்த  உதயத்தின் ஒளி தொடரும். 

27 comments:

  1. we do not need to obey to a human been in which makes us to do something against Allah.

    ReplyDelete
  2. தடங்கல்களுக்கு மன்னிக்கவும், ஏனெனில், நோன்புப் பெருநாள் 9 ஆம் திகதி என்று முன்பாகவே பிறை கலண்டரில் அடிக்கப்பட்டுள்ளது. எனவே தயவு செய்து வானத்தைப் பார்க்காமல் காலண்டரைப் பார்க்கவும் - இப்படிக்கு அகில இலங்கை உலக்கை சபை

    ReplyDelete
  3. Mr. Meeran what are you trying to say now? Are you on sense while writing this? this is not a small mistake to just leave and product them. Then who is operating them? They should operate according to the holy quran and sunnah not by any one else.

    ReplyDelete
  4. //100 வருட பாரம்பரியம் மிக்க உலமா சபையை இழந்தோம் என்றால், நமது மார்க்க விடயங்கள் அனைத்தினதும் முடிவுகள் புத்த சாசன அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்//

    என்ன ஒரு அற்புதமான ஆராய்ச்சி! பிறகு முஸ்லிம் கலாசார அமைச்செல்லாம் சிரைப்பதற்காகவா பயன்படும்?

    ஒவ்வொரு முறையும் உலமா சபை தவறான முடிவுகளை மேற்கொள்ளும் போதும் இவ்வாறான ‘தூரநோக்கு... தூரநோக்கு’ என்ற ரீதியிலமைந்த மொண்ணைக் காரணங்களைக் காட்டி அவர்களுக்கு முண்டு கொடுப்பதியிலே கண்ணும் கருத்துமாய் இருங்கள்!

    ReplyDelete
  5. hi bro in islam.....
    finally you come to say to do a haraam... (fasting a eid day)...
    if this ulamas follow the al quran and sunna this problem does not arise again....
    Mr. meeraan ... you are misleading the puplic.....
    how come a muslim follow a wrong decision....
    ya allah give hidayath to this ulamas and writter.....
    yookin AAL

    ReplyDelete
  6. Jazakallaahu khairan. This is a very important message to our ummaah!

    ReplyDelete
  7. THOTTILUM AATTI PILLAIYUM KILLUKIRIRKAL.....!
    WELLDONE

    ReplyDelete
  8. UNITED WE STAND, DIVIDED WE FALL!

    ReplyDelete
  9. If the first moon was seen in two cities, why ACJU could not accept it? They are responsible for today's problem in the country.

    Why ACJU did not agree with their branch's decision in Kinniya. Kinniya ACJU declared that they are celebrating eid on Thursday.

    It's all fishy. I think old Ulamas in the ACJU are creating this problem? or, somebody forced them to celebrate eid on Friday? or, ACJU do not want to trust the words of any towheed jamaat followers? or ACJU wants to follow India and Pakistan where tableegh jamat's leaders are present. It's really humiliation to our society in the country.

    ACJU must be responsible for this issue. Do they really fear Allah?

    SL Muslims are in real confusion, whether to follow ACJU or the authentic words of Kinniya and Puttalam people.

    What the hell is this? Allah bless our society!

    ReplyDelete
  10. What is the answer of ACJU for moon vision in Kinniya?

    ReplyDelete
  11. ஒரு தலைப்பட்ச்சமான கருத்து என்றுதான் கூறவேண்டும்.தெளிவாகவே பிறை கண்டதனை அறிவித்தும் தலைமைகள் ஏற்க மறுத்ததன் பின்னணி என்ன?.ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் கூட என்ன கூறினார்.பிறை பார்ததவர்கள் அடுத்தவருக்கு கூறாது இருந்து நாளை எல்லோருடனும் சேர்ந்து பெருநாள் கொண்டாடவும். அப்படியாயின் நோன்புப் பெருநாள்,ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினம்களிலும் நோன்பு வைப்பது ஹராம் என்றுள்ளதே இந்த தலைமைகள் மக்களுக்கு ஹராத்தினை செய்யும் படி ஏவி அனைவரினையும் பாவியக்கு கின்றனரா?அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாவத்துக்கும் இவர்கள்தான் பொறுப்புதாரிகளா ?. இந்த சமுதாயன் அல் குர்ரான் ,அல் ஹதீஸ் இல் ஒன்றுபடாத வரை ஒற்றுமை என்பதற்கு அர்த்தமே இல்லது போய் விடும்.அல்லாஹ்வே போதுமானவன்.
    உலமா சபை அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்து முடிவினை அறிவிக்காது ஏன் இப்படி இருக்க வேண்டும்,அடக்குதளுக்கும்,அச்சுரத்துளுக்கும் ஆளாகும் நிலைமை ஏன் அல்லாஹ்வினை மாத்திரம் அஞ்சாத நிலைமைதான் . கட்டுப்படுவதும்,வழிபடுவதும்,அல்லாஹ் ஒருவனுக்கே என்றிருக்க வேண்டும்.நாட்டில் 99% மான பள்ளிவாயல்கள் என்பது ஒரு தவறான கணிப்பிடு.தப்லீக் ஜாமாத் பள்ளிவாயல்கள் மாத்திரமே இவர்களின் கட்டுப்பாட்டில் என்பதுதான் உண்மை.உள்ளதை உள்ளபடி பக்கசார்பின்றி சொல்லவும். தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை,நபிகளாரின் போதனை இந்த மந்திரத்தினை சொல்லுபவர்கள் உண்மையாக நடைமுறைப் படுத்தினால் தீரவி தெளிவே.

    ReplyDelete
  12. Very good article but here after the ACJU should immediately re-organize its island wide branches and must maintain a proper communication with its benches and to guide the community other whys it definitely will be washed out by the community from the community

    ReplyDelete
  13. அன்புக்குரிய சுவைர் மீரான் அவர்களே..!

    உங்கள் கட்டுரையின் பெரும் பகுதி தெளிவில்லாமல் இருக்கிறது. ஏதோ ஒன்றைக் குறிப்பால்-ஜாடை வார்த்தைகளால் சொல்ல வருகிறீர்கள். ஆனால் எதற்கோ, யாருக்கோ பயந்து அதைச் சொல்லாமல் மறைக்கிறீர்கள். எல்லாமே மூடு மந்திரமாகவும், புரியாத புதிராகவும்தான் இருக்கிறது. இதனை விட, நீங்கள் இந்தக் கட்டுரையை எழுதாமலே இருந்திருக்கலாம்.

    நோன்பு பிடிப்பது ஹராமாக்கப்பட்டுள்ள பெருநாள் அன்று நோன்பு நோற்கச் சொல்வதை-அதுவும் இலங்கை முஸ்லிம் உம்மாவை வழி நடாத்திக் கொண்டிருக்கும் உலமா சபையே அவ்விதம் சொல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. யாருக்கோ பயந்து-எதற்கோ அச்சப்பட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ இல்லை; அதனை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாமென்றால், அதனை ஏற்றுக் கொள்வது எவ்வாறு முடியாதோ, அவ்வாறுதான் இதுவும்.

    பிறை கண்டது உண்மையெனில்-ஊர்ஜிதமெனில் இன்று வியாழக்கிழமை பெருநாள் தான். அவ்வாறன்றி,'வேறு காரணங்களுக்காக' வெள்ளிக்கிழமை பெருநாள் என்று சொன்னால் , அவை எந்தக் காரணங்களாக இருந்தாலும்,அவ்வாறு பிரகடனம் செய்வோர் ஈமானை இழந்தவராகவே பார்க்கப்படுவார்!

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக; ஆமீன்!

    ReplyDelete
  14. எந்தக் காரணத்திற்காகவும் கண்ணால் கண்டு சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்பட்டு அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டும் உறுதிப்படுத்தப்பட்ட தலைப்பிறையை அ.இ.ஜ. உலமா சபை நிராகரித்திருக்கக் கூடாது.

    பெருநாள் தினத்தில் முஸ்லிம்களை நோன்பு நோற்கச் செய்து பச்சை ஹறாம் ஒன்றைச் செய்வதற்கு வழிகோலியிருக்கக் கூடாது.

    இன்றைய அ.இ.ஜ.உ.சபை, அரசாங்கத்திற்கு அன்னக்காவடியெடுக்கும் ஒரு சபையாக மாறிப் போயிருப்பது கவலைக்குரிய விஷயம். அதற்காக மார்க்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

    இன்றைய ஜம்இய்யதுல் உலமாக்களின் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை விசனமடையவும், வெறுக்கவும் செய்து வருகின்றன.

    "வட்டிக்குப் பணம் எடுப்பதைக்கூட காத்தான்குடி உலமாக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள்"என்பதையும் கட்டுரையாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஒரு மாதகாலம் கடந்த நிலையிலும் இந்த வட்டிக்கு அங்கீகாரம் வழங்கிய உலமாக்களைக் கண்டறிய முன்வராது கண் மூடியிருக்கும் அ.இ.ஜ.உ. சபை, கண்ணால் கண்ட தலைப்பிறையையும் நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    'ஒரு காலம் வரும். அந்நாளில் உலமாக்களே வானத்தின் கீழ் மிகக் கெட்ட ஜந்துக்களாக இருப்பார்கள்' என்ற அழியா மொழியை நாம் இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும்.

    சுருங்கக் கூறின், இன்றைய ஜம்இய்யதுல் உலமா தனது மார்க்கத்தை நிலை நிறுத்தும் ஆற்றலின்றி நலிவடைந்து போயுள்ளது.

    மார்க்கக் கண்ணோட்டத்துடன் மாத்திரம் அணுகப்பட்டிருக்க வேண்டிய தலைப்பிறை விடயத்தை அரசியல், வர்த்தக, விடுமுறை, வானிலை அறிக்கைக் கண்ணோட்டங்களுடன் எல்லாம் சாம்பாரகக் கலந்து அணுகி வரலாற்றில் பெரும் பாவத்தை இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் செய்வதற்கு இன்று வழி வகுத்து விட்டனர்.

    29 நாட்களும் இஸ்லாமிய வழியில் ஹலாலான நோன்பை நோற்கச் செய்த அ.இ.ஜ.உ. சபை, 30வது நோன்பென்று ஒன்றை ஹறாமாக நோற்கச் செய்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    இவர்கள் விட்ட இம்மகா தவறுக்கு வேறு எந்தக் காரணங்களையும் கூறி பூசி மெழுகிக் காப்பாற்ற முயல்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதே எனது கருத்தாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  15. Allah vey payanthu kollungal Allah yaavarayum paathu kaatpaan.
    10perukku mel Pirey kandulla nilayil kandavar hal nambikkayaanavarhal enra nilayilum kinniya jamiyuthul ulama kiley uruppinarhal kuuda etrukkonra nilayilum, PERUNAAL ENRU URITHIYAANA THINAM NONBU NOTPATHU HARAAM enra nilayilum PORUPPATRA VAARU NADAKKUM kuuttam ethu shonnaalum etruknkolla vendum enru YAARUKKUM KUURA IYALAATHU.

    ReplyDelete
  16. என்ன கொடுமை இது ? ஓவரு முறையும் இதே பிரசினயாவே அளையுரின்களே, உலகத்தில எங்கேயுமே தென்படாத பிறை எப்படி இலங்கைக்கு தென்பட்டது ? இன்னும் இதான் புரியவில்லை....

    ReplyDelete
  17. உலமா சபையின் முடிவின் பின்னணியில் இருக்கக்கூடிய சக்கிகள் பற்றி சிந்திக்கவேண்டும் என கூறியிருப்பதே உலமா சபையின் பலவீனத்தைக் காட்டுகிறது. இறைவனுக்கு மட்டுமே பயப்படக்கூடியவர்களே இவ்வாறான அமைப்புகளில் இருக்க வேண்டும் என்பது இறைகட்டளை. பள்ளிவாசல்களை நிருவகிப்போர் எவ்வாறு இருக்கவேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள விடயங்களை கவனித்தால் இதனை உணரமுடியும்.

    ReplyDelete
  18. முதலில் பெரிய பள்ளியில் பிறை பற்றி தீர்மானிப்பதை ஜம்மிய்யதுள் உலமாவின் காரியலயத்திட்கு மாற்ற வேண்டும்

    ReplyDelete
  19. If ACJU can't do, why they couldn't resign?!

    ReplyDelete
  20. சிறிது காலத்திற்கு தவறான முடிவகளுக்கு நிர்பந்திக்க படலாம் அதனை அப்படியே சமூகம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பேசமுடியாது.. கடந்த வருடமும் இதே போல ஒரு சர்ச்சை தலைபிறை விடயத்தில் வந்ததை நிராகரிக்க முடியாது... பிறைக்குழு தலவரும், இலங்கை ஷரீஆ கவுன்சிலும் இனைந்து ஜமியத்துல் உலமா தலைவருக்கு எதிராக எழுதிய கையேடும் இன்னும் அப்படியே இருக்கிறது..

    தொடர்ச்சியாக இப்படி பொறுப்பற்ற முறையில் ஜமியத்துல் உலமா நடந்துக் கொள்ளுமானால், சமூகத்தில் இருக்க கூடிய நண்மதிப்பை இழந்து விடும் என்பது வெள்ளிடை மலை..

    ReplyDelete
  21. சகோதரரின் இந்த ஆக்கம் உண்மையிலே ஒரு நிதானமான அனுகுமுரை . அல்லா அந்த சகோதரருக்கு அருள் பாளிக்கட்டும் . இங்கு ஒரு சிறு அம்சத்தை மட்டும் நினைவு படுத்துகிறேன் . கட்டுரையில் அமைச்சர் முயற்சித்தும் தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குறிப்பிடபட்டிருந்தது . இதனை ரிஸ்வி முப்தி அவர்கள் இன்று லுஹர் பயான் நிகழ்ச்சியில் மித மனவருத்தத்தோடு சொன்னதோடு அமைச்சரோடும் பேசியதாக கூறி இது போன்ற செய்திகளில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் கூறினார் .

    எனவே குறித்த கட்டுரையின் சொந்தக்காரர் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்குமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறேன் ....

    ReplyDelete
  22. ஏன் ஒரு குழுவாக இணைந்து பிறை பார்க்க முடியாமல் விதண்டாவாதம் பிடிக்கும் கொள்கையாளர்கள்?

    எவ்வளவு மார்க்கம் படித்தவர்கள் உள்ள உலமா சபையினர் எப்போதும் அல்லாஹ்வுக்கு விரோதமான முடிவை எடுக்க மாட்டர்கள் என்றுதான் எனக்கு தோனுகிறது. இருந்தும் சரியான எதிர் பார்த்த தகவல்கள் கிடைக்காததனால் எடுக்கப்படும் தீர்மானங்களை அல்லாஹ்வே பொறுந்திக்கொள்வான், அதற்கான கூலியும் மறுமையில் கிடைத்தே தீரும்.

    இவ்வளவு காலம் காலமாக அ.இ.ஜ.உ சபையினரே பிறையை தீர்மானித்து வந்தார்கள் (ஒருவேளை அதில் பிழையான முடிவுகள் இருந்திருப்பின் யாவும் வல்ல அல்லாஹ் அறிவான்) ஆனால் புதிதாக தெளஹீத் ஜமாஆத்தினரும் பிறை பார்க்கும் படலத்தை ஆரம்பித்தாதிலிருந்து பிறை பார்க்கும் தீர்மானங்களில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் தற்போது அதிகரித்தவண்ணமே உள்ளாது, இதனை அனைத்து முஸ்லிம்களும் அறிந்தவர்களாக ஒரு பிறைக் குழுவாக இணைந்து செயற்பட்டாலே ஒழியா இதுக்கு எந்த நீண்ட கால முடிவுகளும் எட்டப்படாது!

    எங்கள் வழிதான் சரி என்று அடம் பிடிப்பதை விட்டு விட்டு சேர்ந்து இணைந்து செயற்பட முற்படுவோம், கலீமா சொன்ன அனைவரும் முஸ்லிம்களே! சுன்னத்தான விடயங்களில் பிரிவினை வேண்டாம், தப்பான தீர்மானங்களை யார் எடுக்கின்றார்களோ அவர்களுக்கு வல்ல அல்லாஹ் மறுமையில் அதற்குரிய கூலியை கொடுத்தே தீருவான்! இப்படியான விடையங்களில் நமது பிரிவிணைகளை காட்டி அந்னியர்களுக்கு பலவீணர்களாக எமது முஸ்லிம் சமூகத்தைக் காட்டி கொடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கெட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Thauhid pirey paarka thodangiyathaal intha pirachchiney engireerhal ungalukku shinna vayathu enru niney kireean naan ithatku 30- 40 varudambgalukku munnum pala ur halil pirey kanru ACJU yetruk kollatha sandarppamgal pala kandullen. Appo kanda ur perunaal eduththaarhal enra vifaram veli vara 2 naatkal aahividuhirathu. Ippo appadi alla 2 nimidaththil medeavil paravu hirathu

      Delete
  23. Brother,easy to write,easy to confuse the people by wrote like this.But difficult to understand the truth and Islamic low.Dont waste ur time wrote like this.
    First u listen Rizwi Mufthi's special announcement in SLBC.
    I believe ACJU.

    ReplyDelete
  24. உலமா சபை இந்த அளவு தரக்குறைவாக விமர்சிக்கப்படுவதற்கான பிரதாணமான காரணம் என்னவென்றால் தலைமை உலமா சபை நல்லவர்களாகவும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களாகவும் இருக்கலாம் ஆனால் அவர்களைப்பற்றி நாட்டில் உள்ள பாமரமக்களுக்குத் தெரியாது என்றாலும் ஊருக்கு ஊர் பிரதேசத்திற்கு பிரதேசம் நாங்கள் உலமா சபை என்று பெட்டிக்கடை போல் குட்டீ குட்டீ உலமா சபைகளை வைத்துக் கொண்டு உலமாக்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு அவர்கள் செய்கின்ற கீழ்தரமான செயல்களை பார்க்குகின்ற பொதுமக்கள் இவர்களைப் போலதான் இவர்களது தலைவர்களும் என்று நினைப்பதில் தவறு கிடையாது எனவே உலமா சபை செய்ய வேண்டிய முதல் வேலை அப்படிப்பட்ட கீழ்தரமானவர்களை உலமா சபையிலிரு அகற்றி உலமா சபையை தூய்மைப்புடுத்தல் வேண்டும்.

    ReplyDelete
  25. இன்னும் ஒரு பிளவை அ.இ.ஜ.உ. வின் தலைவர் இன்று இப்னு தைமிய்யா மத்ஹபைப் பிரகடனப்படுத்தி ஏற்படுத்தி விட்டார். இவற்றைப் பேசினால் குழப்பவாதிகள் என்பார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் மத்ஹபைப் பின்பற்றாது புதுப் புது மத்ஹப்களை அறிமுகப்படுத்தி தம் குதிகால்கள் தெரிக்க வந்த வழியே செல்கிறார்கள். அப்படிச் செல்வதற்கு இவர்கள் வழிகாட்டுகிறார்கள். பிரிவினை வராதா? வரத்தான் செய்யும்.

    உலக அழிவிற்கு முன் தகுதியில்லாதவர்களெல்லாம் தலைவர்களாக வருவார்கள் என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒரு முன்னறிவிப்பு. அந்த முன்னறிவிப்பு பிழையாக முடியாது. அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டவர்கள் ஜம்இய்யத்துல் உலமா மத்ஹபை பின்பற்ற மாட்டார்கள்.

    இவ்வாறான பித்அத்வாதிகளிடமிருந்தும் வழிகேட்டைப் போதிப்பவர்களிடமிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

    ReplyDelete
  26. we always talk about ACJU when seeing Shawwal crescent. We shouldn't forget that some how this ACJU has done a great leadership to the sri lankan Muslims while the all bloody politicians were crippled.

    ReplyDelete

Powered by Blogger.