நான் தமிழனாக இருந்தாலும் ஐப்னா முஸ்லிம் இணையத்தை நேசிக்கின்றேன் - டாக்டர் ஞானகுணாளன்
(அப்துல்சலாம் யாசீம்)
நான் ஒரு தமிழனாக இருந்தாலும் ஐப்னா முஸ்லிம் இணையத்தளத்தை நேசிக்கின்றேன். காரணம் உண்மைத் தகவல்கலை துணிச்சலுடன் உடனுக்குடன் விரிவாக பிரசுரிக்கும் இணையத்தளம் என்பதற்காகவே அதனை கூறுகின்றேன். இவ்வாறு தெரிவித்தார் டாக்டர் ஞானகுணாளன்!
திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக மக்கள் அதிகமாக வைத்தியத்தேவைகளை மேற்கொள்ள வரும் வைத்தியசாலையாகும்.அவ்வாறான நிலையில் மக்களுக்கு சேவைகள் சிறந்த முறையில் வழங்கப்படுகின்றனவா என வைத்திய அத்தியட்சகரிடம் செய்தியாளரர் வினவிய போது மக்களுக்கு குறைபாடுகள் அல்லது நோயாளர்கள் விடயத்தில் அக்கறை காட்டாமை போன்ற செயற்பாடுகள் இருக்குமானால் உடனடியாக ஐப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்திகளை வெளியிடும். ஆனாலும் செய்தியாளர்கள் மட்டுமல்லாது பத்திரிகையாளர்கள்,இணையத்தளங்ள் அபிவிருத்தியை மட்டுமல்லாது மக்கள் பிரச்சளைகளையும் பிரசுரிக்க வேண்டும்.
ஐப்னா முஸ்லிம் இணையத்தளம் அபிவிருத்தி மட்டுமல்லாது குறைகளையும் சுட்டிக்காட்டுகின்றது. அதனாலேயே நான் ஐப்னா முஸ்லிம் இணையத்தளத்தை விரும்புகின்றேன் எனவும் டாக்டர் ஈ.ஐ.ஞாணகுனாளன் தெரிவித்தார்.
Post a Comment