Header Ads



புத்தளத்தில் வர்த்தக நிலையம் தீயில் கருகியது - மூவர் காயம் (படங்கள்)


புத்தளம் நகரில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வர்த்தக நிலையமொன்று முழுமையாக தீயில் கருகியதுடன் அதனை அணைக்கச் சென்ற 3 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை புத்தளம்-கொழும்பு வீதியில் நவீன சந்தை தொகுதிக்கு முன்பாக அமைந்திருந்த துவிக்கர மற்றும் ஏனைய பொருட்களை கொண்ட வர்த்தக நிலையமே இவ்வாறு தீயில் சேதமாகியுள்ளது.

கடைத்தொகுதிக்கு மேலாக செல்லும் அதி உயர் மின்சாரத்தின் மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த புத்தளம் நகர சபை தீ அணைக்கும் பிரிவு, மற்றும் இரானுவ பிரிவு என்பன கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க அதனை கட்டுப்படுத்தியுள்ளது.

இதேவேளை தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 3 பொதுமக்கள் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர். Vi

No comments

Powered by Blogger.