செயற்கை மாட்டிறைச்சியில் பர்கர்
சோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சியைக் கொண்டு செய்யப்படும் உலகின் முதல் மாட்டிறைச்சி பர்கர் திங்களன்று லண்டனில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது.
பசுவின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்திடச்சு விஞ்ஞானிகளால் இந்த செயற்கை பர்கர் உருவாக்கப்பட்டது.
20,000க்கும் மேற்பட்ட சிறிய நூலிழை போன்ற இறைச்சி இதற்காக சோதனைக் குழாய்களில் உருவாக்கப்பட்டு இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.
புரதச்சத்துக்கு உலக அளவில் இருக்கும் தேவை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு இது போன்ற செயற்கை இறைச்சிப் பொருட்கள் எதிர்காலத்தில் ஒரு தீர்வாகலாம் என்று, இது குறித்து ஆராய்ச்சி செய்த மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகக் குழு நம்புகிறது.
இது உணவு உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வல்லது என்றும் அது நம்புகிறது. ஆனால் இந்த 150 கிராம் செயற்கை பர்கரின் விலை என்ன தெரியுமா?
மூச்சடைத்துவிடாதீர்கள் -- சும்மா 3 லட்சம் டாலர்கள்தான்! bbc
Post a Comment