ஒலுவில் துறைமுக திறப்பு விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்
(ஏ.எல்.ஜனூவர்)
ஒலுவில் துறைமுக திறப்பு விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன அவர்களினதும் தலைமையில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. அபிவிருத்தி பணிகளையும், திறப்பு விழா சம்பந்தமாகவும் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் துறைமுகத்துக்கு சென்று அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, துறைமுக அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment