சிறுவர் கழகங்களுக்கிடையில் விவாதப் போட்டி
(அனா)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறுவர் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறுவர் கழகங்களுக்கிடையில் விவாதப் போட்டி ஒன்று நேற்று (28.08.2013) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.பாஸில், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.மணிவன்னன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிஸ்வி தாஸிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆறு (06) சிறுவர் கழகங்கள் கலந்து கொண்ட இவ் விவாதப் போட்டி நிகழ்ச்சியில் பிரதம தீர்ப்பாளராக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபரும் இலக்கியவாதியுமான எச்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டிக்கு ஆயிஷா சிறுவர் கழகமும் அல் இஹ்லால் சிறுவர் கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான இறுதிப்போட்டி எதிர் வரும் ஒக்டோம்பர் மாதம் 01ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தில் இடம் பெறும் என்று சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிஸ்வி தாஸிம் தெரிவித்தார்.
Post a Comment